உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது அரசியல் நிலைப்பாடு: விடாமல் கம்பு சுத்துகிறார் திருமா!

ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது அரசியல் நிலைப்பாடு: விடாமல் கம்பு சுத்துகிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2a1ih29v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம். அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். குறிப்பாக, தி.மு.க.,வைப் பிடிக்காதவர்கள், தி.மு.க., கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம்.

மகத்தான வெற்றி

இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இருந்தே இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் அவ்வப்போது நம்மை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொண்டே நமது கூட்டணிக்கெதிராக நம்மைச் சீண்டியும் தூண்டியும் வருகின்றனர். அவற்றுக்குப் பலியாகாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இயங்கிவருகிறோம். கடந்த காலங்களில் அத்தகைய அரசியல் சதிகளையும் முறியடித்திருக்கிறோம். 2019, 2021, 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றிகளைக் குவித்து வருகிறது.

அதிகாரத்தில் பங்கு

இதனை கொள்கைப் பகைவர்களாலும் அரசியல் போட்டியாளர்களாலும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ள இயலும்? 2026ல் நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பர்? எப்படியாவது கூட்டணியைச் சிதறடித்து நமது வெற்றியைத் தடுக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாகும். அவர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு அடையாளங்களில் இயங்கினாலும் அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சிதறடிப்பது மட்டும் தான். 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்னும் நமது கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கத்தை, கொள்கை நிலைபாட்டை ஒரு கருவியாக கையிலெடுத்தனர்.

எதிர்பார்ப்பு

தற்போது, த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய் உடன், நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர். அவர் அண்மையில் அவரது மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார். விஜய் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், 'ஆட்சியதிகாரத்தில் பங்கு' என்பது 'விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே; எனவே, அவர்களைக் குறிவைத்து தான் நடிகர் விஜய் பேசியுள்ளார்' என்கிற ஊகத்தில் அரசியல் தளத்தில் உரத்த உரையாடல்கள் நடந்தன. அது தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பங்குண்டு. அதாவது, நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி. அதனை தக்க வைப்பதும் பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறபோது, நாம் இன்னொரு கூட்டணிக்குப் போவதற்கோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ என்ன தேவை எழுந்துள்ளது? இது நம்மை மிக மிகப் பலவீனமானவர்களாகக் மதிப்பீடு செய்வோரின் நஞ்சு நிறைந்த மிகவும் கேடான ஒரு மனோநிலையாகும்.

கூட்டணி

தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்! இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும். குழப்பம் தேவையில்லை. 'ஆட்சியதிகாரத்தில் பங்கு' என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு! அதனை வென்றெடுப்பதற்கு நம்மை நாமே கட்டமைப்பு மற்றும் கருத்தியல் அடிப்படையில் இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவற்றில் நம் கவனம் குவிப்போம்! நமது இலக்கில் நாம் குறியாக இருப்போம்! நமது களத்தில் என்றும் உறுதியாக நிற்போம்! இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Smba
நவ 09, 2024 06:53

இரண்டு பெரிய கட்சிகளும் புறக்கணித்தால் ஒரு சீட் கூட தேற மாட்டார்


Kasimani Baskaran
நவ 09, 2024 06:41

ஒருவேளை தீமுக்காவுக்கு மட்டும் ஏன் ஊழல் செய்யும் வசதி வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும், தங்களுக்கும் சேர்த்து கொடுக்கப்பட வேண்டும் என்ற அங்கலாய்ப்பாக இருக்கலாம். ஒற்றுமையில்லாத பழைய மாணவர் மற்றும் புதிய மேதைகள் கண்டமேனிக்கு அடித்து அந்தச்செய்தி அனைவருக்கும் தெரிவதால் வந்த பொறாமையாகக்கூட இருக்கலாம்.


Mani . V
நவ 09, 2024 05:43

யாசகம் கேட்பதை நாசுக்காகக் கேட்கிறார். "குட்டி இளவரசர் இன்பா வாழ்க" என்று காலை சுற்றிக் கொண்டு ஸாரி கோஷம் போட்டுக் கொண்டு கிடப்பார்


R.MURALIKRISHNAN
நவ 09, 2024 02:43

திருமா அவர்களே நீங்கள் கம்பு சுத்த வேண்டியது உங்கள் கூட்டணி தலைவரை நோக்கித்தான். வெறும் காற்றில் கம்பு சுத்துவதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. திரும்பி உங்கள் தலைவரை நோக்கி சுற்றுங்கள்


ramesh
நவ 08, 2024 22:13

ராமதாஸ் dmk கூட்டணிக்குள் வருவார் .திருமா வளவன் வெளில போவார் .இது தான் வரும் சட்டசபை தேர்தலில் நடக்கும்


vijay
நவ 08, 2024 21:11

நல்லா கம்பு சுத்து. ஆனால், வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பே..இல்லை. அது உமக்கும் தெரியும். உன் இனமக்களை எத்தனை காலத்துக்கு ஏமாத்துவ?. இதுக்கே தலை சுத்துதே


r ravichandran
நவ 08, 2024 21:04

இறுதி வரை திமுகவிடம் அடிமையாக இருந்து 6 சீட்டு பெற்று கொள்ளுவோம் என்பதை சுருக்கமாக சொல்லாமல் பெரிதாக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.


தாமரை மலர்கிறது
நவ 08, 2024 19:58

திருமா திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து பிஜேபி தலைமையில் இயங்கும் அதிமுக அணியில் இணைவது நல்லது. அல்லது குறைந்தபட்சம் விஜய் அணிக்கு செல்வது நல்லது. திமுக அணியில் இருந்தால் செல்லாக்காசாகி விடுவார்.


வைகுண்டேஸ்வரன்
நவ 08, 2024 20:59

"பிஜேபி தலைமையில் இயங்கும் அதிமுக அணி" யா? எது? ஓ பி எஸ் சின் அதிமுக வா? பிஜேபி யுடன் சேர்ந்ததால் காணாமல் போன லிஸ்ட் : அதிமுக, பாமக, வாசன், சரத்குமார், ஓ பி எஸ், பரிவேந்தர், ஜான் பாண்டியன். இந்த லிஸ்டில் திருமா வும் சேர்ந்தால் நல்லது. திமுக வின் எக்ஸ்ட்ரா லக்கேஜ் குறையும்.


ramesh
நவ 08, 2024 22:16

dmk வில் இருந்து யார் வெளியில் போனாலும், மற்ற கட்சிகளை விழுங்க நினைப்பதை விடாத வரை,தாமரை வெற்றி பெறுவது கடினம்


Pandianpillai Pandi
நவ 08, 2024 19:05

சரியாக சொல்லியிருக்கிறார். தி மு க கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி அதன் வல்லமை காட்ட அவசியமில்லை. அதிகார பங்கும் தேவையில்லை. மக்களை நேசிக்கின்ற அக்கைறையுள்ள கட்சிகள் தி மு க வில் கூட்டணியில் உள்ளன. அதனாலே தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டாலும் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.


வைகுண்டேஸ்வரன்
நவ 08, 2024 20:50

சிறப்பான பதிவு. உண்மையும் இது தான். வாழ்த்துக்கள்.


Raj S
நவ 09, 2024 01:15

நீட் தேர்வு இன்னும் ரத்துபடி ஆகல... ரகசியம் தெரியும்னு சொன்ன அந்த திருட்டு பயல கேட்டு சொல்லுங்க... இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகமா இருக்கு...


பேசும் தமிழன்
நவ 08, 2024 18:37

யாரு.... பத்து தோல்வி பழனிசாமி அவர்களை தான் கூறுகிறார் போல் தெரிகிறது.... இனிமேல் திமுக விரட்டி விட்டால்.... அங்கேயும் உள்ளே எடுக்க மாட்டார்கள்..... நம்ம நிலைமை..... திண்டாட்டம் தான்.


முக்கிய வீடியோ