அரசியலாக்குகிறது தி.மு.க.,
கோரிக்கைகளை என்னிடமோ, சுகாதார செயலரிடமோ தெரிவிக்காமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தி.மு.க.,வினர் தேவையில்லாமல் அரசியல் செய்கின்றனர். பேச்சு, தாமதமானதற்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குறுக்கீடே காரணம். த.வெ.க., அரசு வந்ததும், 2500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளோம்; 1695 புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க உள்ளோம். காலியாக உள்ள 4724 பணியிடங்களுக்கு, மாவட்ட நலச் சங்கங்கள் வாயிலாக பணி வழங்க அரசாணை வந்து விட்டது.- – அருண்ராஜ், சுகாதார துறை அமைச்சர், த.வெ.க.,