உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்

ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்

சென்னை: தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான முதல்நிலை ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம், வரும் 22, 23ம் தேதிகளில் புதுடில்லியில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் - தே.மு.தி.க., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, நாம் தமிழர், வி.சி., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை