உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஜினியரிங் கல்லுாரிகளாக மாறும் பாலிடெக்னிக் கல்லுாரிகள்

இன்ஜினியரிங் கல்லுாரிகளாக மாறும் பாலிடெக்னிக் கல்லுாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளை இன்ஜினியரிங் கல்லுாரிகளாக மாற்ற, அதன் நிர்வாகங்கள் முயற்சித்து வருகின்றன.

அனுமதி:

தமிழகத்தில், 55 அரசு, 32 அரசு உதவிபெறும், 430 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், சிவில், மெக்கானிக்கல், விவசாயம், உற்பத்தி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கட்டுப்பாடு, தகவல் தொடர்பியல், கணினி பொறியியல், டெக்ஸ்டைல், கணினி பயன்பாடு, பயோ கெமிக்கல், பயோ மெடிக்கல், லாஜிஸ்டிக், ஆட்டோமொபைல், பிரின்டிங் தொழில்நுட்பம், இ.சி.ஜி., போன்ற பாடப்பிரிவுகளில், மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகள் உள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மொத்தம், 1.62 லட்சம் மாணவர்கள் படிப்பதற்கான இடங்கள் உள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த போதும், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை மிகவும் சரிந்து வருகிறது. 2022 - -23ம் கல்வியாண்டில் 68,888; 2023- - 24 ம் கல்வியாண்டில், 63,561 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். கடந்த ஆண்டு, 58,426 இடங்கள் மட்டுமே நிரம்பின. மாணவர் சேர்க்கை குறைந்ததால், கடந்த ஆண்டு 17 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு, 15 பாலிடெக்னிக் கல்லுாரிகளை மூட, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

முடிவு:

இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், கன்னியாகுமரியில் 4; ஈரோடு, நாமக்கல், சென்னையில் தலா 2; திருப்பூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருச்சி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தலா ஒன்று என, மொத்தம், 15 பாலிடெக்னிக்குகளை மூட அனுமதி கோரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவு காரணம் என தெரிவித்து, அதற்கான ஆவணங்களை இணைத்துள்ளனர்.ஏ.ஐ.சி.டி.இ., புதிய விதிமுறைகளின்படி, ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பை வேறு படிப்புகளுக்கு பயன்படுத்தலாம் என்பதால், இந்த பாலிடெக்னிக் கல்லுாரிகள், பாலிடெக்னிக் உரிமத்தை ரத்து செய்து விட்டு, இன்ஜினியரிங் கல்லுாரிகளாக மாற்ற முடிவு செய்துள்ளன. பொதுவாக, பாலிடெக்னிக் கல்வி முடித்ததும், பல்வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இன்ஜினியரிங் படித்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால், மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர விரும்புகின்றனர். இது, பாலிடெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு, முக்கிய காரணமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Senthil kumaar J S
மே 24, 2025 08:19

காரணம் ஒன்று தான் ஏன் படிக்க வேண்டும்? அறிவாற்றலை மேம்படுத்தி அதன்மூலம் நல்ல வேலையை பெற்றிட ஆனால் பேராசை யாரை விட்டது 95% அசத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு அரசால் எப்படி அறிவார்ந்த சமுதாயம் உருவாக்க முடியும்? எல்லா துறைகளிலும் ஒழுக்கமின்மை அதிகம் தவறு செய்தால் பாரபச்சமின்றி தண்டனை கொடுக்க வேண்டும். தேர்ச்சி பெற்று மாணவ மாணவிகள் உண்மையில் அதற்கான தகுதியோடு பெறவேண்டும் எப்படியாவது ஒழிந்து இப்படிதான் என ஒழக்க நெறியோடு வாழ கற்றுத் தரவேண்டும் அது தான் உயர்வான கல்வி. எல்லாம் போலியாக தோன்றுவதில் மெய்யறிவு தொலைந்து பொய்யறிவு மேலோங்குகிறது. பேராசையால் பெற்றோர்களும் மற்றவர்களும் இந்த நிலையை உருவாக்கி உள்ளனர்.


Rengaraj
மே 22, 2025 11:33

தொழில் நுட்ப படிப்பை நல்ல முறையில் படித்தால் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்ற கனவுடன் சேரும் எஞ்சினீரிங் கல்லூரி மாணவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. அதற்கு பல காரணிகளை சொல்லலாம். ஆனால் மாணவர்களை வேலை பார்ப்பவர்களாக மாற்றுவதற்கு பதிலாக குறைந்த -பட்சம் பத்து பேருக்கு வேலை தருபவர்களாக, தொழில்முனைவோர்களாக அவர்களை மாற்ற வேண்டும். கல்வி நிலையங்கள் அதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். இனி வரும் காலங்களில் பாலிடெச்னிக் கல்வி ஏட்டளவில் மட்டுமே இருந்தால் மாணவர்களுக்கு சேர்வதில் நாட்டம் இருக்காது. மாணவர்களும் படித்து முடித்து தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டவேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பெரும்.


ஆரூர் ரங்
மே 22, 2025 11:18

ITI இல் தொழில் கல்வி படித்தவர்கள் கூட ஏதாவது சுய தொழில் துவங்கி நிம்மதியா வாழ்கிறார்கள். வீடு நிலங்களை விற்று என்ஜினீயரிங் பாலிடெக்னிக் படித்தவர்கள் வெள்ளைக்காலர் வேலைக்கு முயற்சித்து ஏமாந்து டெலிவரி கூரியர் வேலைக்கு சென்று விடுகிறார்கள். கல்வித் தந்தைகளுக்கு மட்டுமே பல கோடி லாபம்.


நாஞ்சில் நாடோடி
மே 22, 2025 13:30

CORRECT...


ஆரூர் ரங்
மே 22, 2025 11:02

ITI இல் தொழில் கல்வி படித்தவர்கள் கூட ஏதாவது சுய தொழில் துவங்கி நிம்மதியா வாழ்கிறார்கள். வீடு நிலங்களை விற்று என்ஜினீயரிங் பாலிடெக்னிக் படித்தவர்கள் வெள்ளைக்காலர் வேலைக்கு முயற்சித்து ஏமாந்து டெலிவரி கூரியர் வேலைக்கு சென்று விடுகிறார்கள். கல்வித் தந்தைகளுக்கு மட்டுமே பல கோடி லாபம்.


Karthik
மே 22, 2025 10:15

Advance congratulation for upcoming VIPs..


baala
மே 22, 2025 10:09

கொள்ளையடித்த பணத்தில் உருவாக்கப்பட்டவைதானே.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 22, 2025 10:01

எனக்கென்னவோ டவுட்டு வருது. பாலிடெக்னிக் கல்லூரியில் மூணு வருஷம் பீஸ் குறைவு .இஞ்சி காலேஜ்ல நாலு வருஷம் பீஸ் அதிகமாக வசூலிக்கலாம். அதுனாலதான் பாலிடெக்னிக்கை இஞ்சி காலேஜா மாத்த விரும்பறாங்க.


D Natarajan
மே 22, 2025 07:55

எல்லா அரசியல்வாதிகளின் கல்லூரிகளுக்கு கோவிந்தா .


சண்முகம்
மே 22, 2025 07:09

என்ன பண்ணப் போறீக?


Padmasridharan
மே 22, 2025 06:44

படிச்சதுக்கு வேலை கிடைக்குமா இல்ல எல்லாரும் ViPs வேலை இல்லா பட்டத்தாரிகளா இருப்பாங்களா சாமி