உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் கொண்டாட்டம்: 44,580 பஸ்கள் இயக்கம்

பொங்கல் கொண்டாட்டம்: 44,580 பஸ்கள் இயக்கம்

சென்னை:பொங்கல் பண்டிகையொட்டி, தமிழகம் முழுதும் 44,580 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தமிழகம் முழுதும் 21,904 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக, 22,676 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம், 44,580 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.சென்னையில் இருந்து நாளை வரை, தினமும் இயக்கக் கூடிய, 2,092 பஸ்களுடன் கூடுதலாக, 5,736 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நான்கு நாட்களும் சேர்த்து, 14,104 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல பிற ஊர்களில் இருந்து நாளை வரை, 7,800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், திருச்சி, மதுரை, துாத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள், சென்னையில் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக, ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த மூன்று பஸ் நிலையங்களுக்கும் கூடுதலாக, 320 இணைப்பு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ