உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பொங்கல் பண்டிகை விழா; தஞ்சாவூரில் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பங்கேற்பு?

 பொங்கல் பண்டிகை விழா; தஞ்சாவூரில் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பங்கேற்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில், ஜனவரி மாதம் நடக்கும் பொங்கல் பண்டிகை விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை, பிரதான அரசியல் கட்சிகள் துவக்கி உள்ளன. தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பீஹாரை தொடர்ந்து, தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என, பா.ஜ., தேசிய தலைமை விரும்புகிறது. இதற்கான வியூகங்கள், டில்லியில் வகுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் அதிருப்தியில் உள்ள விவசாய சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோரை அணி திரட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்ட, டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நடக்க உள்ள பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி அடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, விவசாய சங்க நிர்வாகிகள் சிலரை டில்லிக்கு அழைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி உள்ளார். பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த, தமிழக பா.ஜ., தலைமைக்கு தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rajendra Kumar
டிச 16, 2025 06:38

தமிழைப் போற்றும் உலகத்தலைவர் மோடி அவர்கள். ஐ.நா சபையில்....., இமயமலையில் ராணுவ வீரர்களுடன், .....குஜராத் படேல் சிலை முன் ஒற்றுமை தினத்தன்று.... இப்படி தமிழைப் போற்றும் மோடி அவர்களே வருக. ஓட்டுக்காக, தங்களின் ஊழல்களை மறைக்க திமுக தமிழை பயன்படுத்துவது பல உ.பி களுக்கு தெரியாது.


Venugopal S
டிச 15, 2025 16:00

மசூதி அல்லது சர்ச் தலை மேல் தான் பொங்கல் வைப்போம் என்று சொல்லப் போகிறார்கள்!


vivek
டிச 15, 2025 17:07

அதுக்கும் திமுக சொம்புகள் முட்டு குடுக்குமே வேணு


vivek
டிச 15, 2025 17:08

உனக்கு ஓசி பொங்கல் வேண்டாமா வேணு....


N S
டிச 15, 2025 11:51

தன்னிகரில்லா தரணி போற்றும் திராவிட மாடல் தமிழக முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, மற்றும் அமைச்சர்களும், இப்பொழுதே தஞ்சாவூர் செல்ல தயாராகிவிடுவார்கள்.


Venugopal S
டிச 15, 2025 09:45

என்ன தான் புதுப்புது யுக்திகளுடன் இங்கு வந்தாலும்....


vivek
டிச 15, 2025 11:51

நீ எவளோ பெரிய சொம்பு தூக்கினாலும் கூலி ரூபாய் இருநூறு மட்டுமே


JayaSeeli
டிச 15, 2025 09:04

தேர்தல் நெருங்கும் நேரம் இல்லையா ...... அதான் ....


பாமரன்
டிச 15, 2025 08:44

இது ஒரு பொதுவான பண்டிகை ... இங்கே தலீவன் தொண்டன்லாம் இல்லை...


ராஜாராம்,நத்தம்
டிச 15, 2025 09:13

இம்புட்டு அறிவா?


VENKATASUBRAMANIAN
டிச 15, 2025 08:16

திமுகவிற்கு பீதி இப்போதே. உடனே இந்தி எதிர்ப்புப் நீட் போன்றவை வெளியே வரும். இதுதான் திராவிட மாடல்


RAMAKRISHNAN NATESAN
டிச 15, 2025 06:38

வெச்சு செஞ்சுக்கிட்டே இருக்கீங்க ..... நீங்க ஒரு தடவை வந்தீங்கன்னா அவரு நாலு நாலு கதறிக்கிட்டே இருக்காரு ........


Indian
டிச 15, 2025 06:37

சூப்பர்


Indian
டிச 15, 2025 06:35

அருமை. அருமை. அப்படியே அந்த கோவை , மதுரை மெட்ரோ திட்டத்தையும் அனுமதியுங்கள்


புதிய வீடியோ