உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் மளிகை விற்பனை துவக்கம்

பொங்கல் மளிகை விற்பனை துவக்கம்

சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 199 ரூபாய்க்கு இனிப்பு பொங்கல், 499 ரூபாய்க்கு சிறப்பு பொங்கல், 999 ரூபாய்க்கு பெரும் பொங்கல் என, மளிகை தொகுப்புகளை கூட்டுறவு துறை அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விற்பனையை, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், சென்னையில் துவக்கி வைத்தார். துறை செயலர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூடுதல் பதிவாளர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், பெரியகருப்பன் அளித்த பேட்டி:கூட்டுறவு பொங்கல் பெயரில், மளிகை தொகுப்புகள் விற்கப்படுகின்றன. 199 ரூபாய் தொகுப்பில் பச்சரிசி, பனை வெல்லம் உட்பட ஏழு மளிகை பொருட்கள் இடம்பெறும். 499 ரூபாய் தொகுப்பில், 19 வகை பொருட்களும்; 999 ரூபாய் தொகுப்பில், 34 வகை பொருட்களும் இருக்கும். கூட்டுறவு அங்காடிகளில் மளிகை தொகுப்புகள் விற்கப்படும். ரேஷன் கார்டுதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை, முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை