உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசார் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

போலீசார் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 2025ம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக போலீசார் மற்றும் சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.3184 தமிழக போலீசார் மற்றும் சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜன 14, 2025 08:46

மெடல் வாங்காதவங்க யாரும் இருக்காங்களா?


raja
ஜன 13, 2025 13:58

லிஸ்ட்ல அண்ணா பல்கலை புகழ் அருண் இருக்காரா... சீமான் புகழ் வருன் இருக்காரா ..


vbs manian
ஜன 13, 2025 12:21

ஆட்சிக்கு அரணை எப்படி மறப்பது.


சமீபத்திய செய்தி