உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்மாணிக்கவேல் வழக்கு: டி.எஸ்.பி.,க்கு நோட்டீஸ்

பொன்மாணிக்கவேல் வழக்கு: டி.எஸ்.பி.,க்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., பதிந்த வழக்கை ரத்து செய்யக் கோரியதில் டி.எஸ்.பி., காதர்பாஷாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார் (2018ல் ஓய்வு பெற்றார்). சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர்பாஷா மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிந்தார்.காதர் பாஷா, 'தீனதயாளனை ஒரு வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்நீதிமன்றம், 'சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும்.முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.சி.பி.ஐ., போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர். அவர் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ.,பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுதாரருக்கு எதிரான வழக்கின் மீது மேல் விசாரணை மேற்கொள்ள, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்து மார்ச் 13ல் தனி நீதிபதி உத்தரவிட்டார். நேற்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி: இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள காதர்பாஷாவின் கருத்தை அறிய வேண்டியுள்ளது. அவரதுதரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதிடநோட்டீஸ் அனுப்பி மார்ச் 28 க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vel1954 Palani
மார் 18, 2025 20:07

யாரையோ காப்பாற்ற பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


RADHAKRISHNAN
மார் 18, 2025 16:04

திரு பொண்மாணிக்கவேல் மிகச்சிறந்த ஆண்மீகர் மிகச்சிறந்த அதிகாரி இந்த பாஷா தில்லுமுல்லுக்காரனாக இருப்பார், முடிவில் தெரியும்


Padmasridharan
மார் 18, 2025 10:01

கடவுள் நேர்ல வந்து கேட்கபோறதில்ல, நம்ம சிறியவர்ல இருந்து பெருசுங்க வரைக்கும் ஏமாத்தி எப்படியெல்லாம் லஞ்ச பணத்த சம்பாதிக்கலாம்னு நினைக்கிற காவலர்கள் எல்லாம் கர்மா பத்தி நினைச்சாவே போதும். தனக்கும், தன்னை சார்ந்து இருக்கிறவங்களுக்கும் வர்ற health issues குறையும்.


Apposthalan samlin
மார் 18, 2025 10:56

பொன் மாணிக்கவேல் யோக்கியன் என்று நினைத்தோம் அவர் மேலயே cpi வழக்கு பதிந்து உள்ளது என்ன நடக்குது ?


M R Radha
மார் 18, 2025 13:52

பொன் மாணிக்கவேல் போன்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகள் மீதே குற்றச் சாட்டை வைப்பவன் ஓர் திருட்டு வழி வந்தவனாகத்தான் இருப்பான்


M R Radha
மார் 18, 2025 13:54

அப்போஸ்தலின் ஷாம்லின் ஒனக்கு 200ரூவா வந்துடுச்சா? 21ம் பக்கம் படிச்சிருக்கியா?


புதிய வீடியோ