உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் முன்ஜாமின் கோரிய மனு மீதான தீர்ப்பை நாளைக்கு ( ஆக.,30) விசாரணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ், 2017ல் பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின், ஜாமினில் வெளியே வந்த நிலையில், காதர் பாஷா, 'தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்கு பதிந்து, கைது செய்தார். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சி.பி.ஐ.,வழக்கு பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேல் மீது, டில்லி சி.பி.ஐ.,போலீசார் வழக்கு பதிந்தனர். 'இதை சி.பி.ஐ.,விசாரிக்க அதிகாரமில்லை. உள்நோக்கில் சட்டவிரோதமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, பொன்மாணிக்கவேல், உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கை இன்று ஒத்தி வைத்தார். இன்றைய விசாரணைக்கு பிறகு தீர்ப்புக்காக நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஆக 29, 2024 20:36

அப்படிப்பார்த்தால் முதல்வரிடம் அமைச்சர்களாக செயல் புரியும்,புரிந்தவர்கள் அமலாக்காத்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்கு தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டால், அது அந்த முதல்வரையும் பாதிக்குமா அப்போ அவருக்கும் அதே தண்டனை கிடைக்குமா என்றுதான் நீதி அரசர்கள் சொல்ல வேண்டும்


Dharmavaan
ஆக 29, 2024 08:48

சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு...எதிரி முஸ்லீம் என்பதால் இந்த சலுகையோ ....நீதியிடம் நேர்மையில்லை


Kanns
ஆக 29, 2024 08:28

Here Bail MUST be Given his Exemplary AntiCriminal Police & Devotional Service


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை