உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதிகளை நாயகர்களாக சித்தரிப்பது குண்டுவைத்ததைக் காட்டிலும் படுபாதகம்: தமிழக பா.ஜ.,

பயங்கரவாதிகளை நாயகர்களாக சித்தரிப்பது குண்டுவைத்ததைக் காட்டிலும் படுபாதகம்: தமிழக பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை நாயகர்களாக சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படு பாதக செயல், '' என தமிழக பா.ஜ.,வின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அல் -- உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை போலீசார் கைது செய்தனர். 26 ஆண்டுகளாக பாஷா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவால் ஜாமினில் வெளியே வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று அவர் மரணமடைந்தார். இன்று அவரது உடல் , ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o4hzwq0k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான பாஷா நேற்று உயிரிழந்த நிலையில், சில அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் அந்த நபரை ஏதோ கதாநாயகன் போல் போற்றுவதும், போராளி என்று குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை குற்றவாளிகளை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை 'ஹீரோக்களாக' சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படு பாதக செயல். எந்த ஒரு தனிநபரின் இறுதி சடங்கும் மரியாதையோடு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், பல இறுதி ஊர்வலங்களுக்கு காரணமான ஒரு நபரின் இறுதி சடங்கை பெரிய அளவில் நடத்த அனுமதித்தது முறையல்ல. வங்கதேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்த தமிழக மக்களை, ஹிந்து உணர்வாளர்களை கைது செய்து ஒரு நாள் முழுக்க சிறையில் வைத்த திராவிட மாடல் அரசு, 60 உயிர்களை பலி கொண்ட, பல நூற்றுக்கணக்கான மக்களை செயலிழக்கச் செய்த, கோடிக்கணக்கான மதிப்புள்ள பொது சொத்துக்களை இழப்பதற்கு காரணமான ஒரு நபரின் இறுதி ஊர்வலத்தை ஒரு தலைவரின் இறுதி ஊர்வலத்திற்கு இணையாக நடத்த அனுமதித்தது கண்டனத்திற்குரியது.இன்றும் அல்-உம்மாவை தோற்றுவித்த, தீவிரமாக செயல்பட்ட பலர் தீவிர அரசியலிலும், மத அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை தமிழக அரசும், காவல் துறையும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Matt P
டிச 18, 2024 22:16

திமுகவுக்கு ஆதரவாக கருத்து எழுதுகிறவர்களெல்லாம் இவருக்கும் ஆதரவாக கருதுகிறீர்களே. கொஞ்சம் மனசாட்சியோடு கட்சியை மறந்தும் கருத்து எழுதலாமே.


venugopal s
டிச 18, 2024 12:23

குஜராத் கலவர தீவிரவாதிகளை விடுதலை செய்து விழா எடுத்த குஜராத் மாநில பாஜக அரசையும் அப்போதே இதேபோல் கண்டித்து இருந்திருந்தால் நியாயம்! அப்போது மௌனம் காத்தது ஏனோ?


வல்லவன்
டிச 17, 2024 22:55

மூர்கன்கள் எப்போதும் நம் நாட்டிற்கு நல்லது நினைத்தவர்கள் அல்லர். அவர்கள் உடம்பில் ஓடுவது வன்மம், விஷம். அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் இல்லையெனில் கோவையை மீண்டும் அழித்துவிடுவார்கள். ஒரு தீவிரவாதிக்கு 2000 பேர் கூடுகிறார்கள் என்றால்,இன்றுவரை எத்தனை தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டிருப்பார்கள். இனி கோவையை அந்த கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்


Matt P
டிச 18, 2024 20:19

அந்த இரண்டாயிரம் பேரும் அவரை தேச பக்தர்களாக நினைத்திருக்கிறார்கள் என்று தான் பொருள்


T.sthivinayagam
டிச 17, 2024 22:20

ஆகமம் என்று சொல்லி ஹிந்துக்களிடம் ஆன்மீக பாகுபாட்டை காட்டுவது குண்டு வைப்பதை விட கொடியது


Bala
டிச 18, 2024 01:20

சம்பந்தம் இல்லாத உன்னுடைய இந்த கருத்து திராவிட மாடலய்விட கொடியது


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2024 20:44

இன்று எனது வயலில் ஒரு கரும்பன்றி இறந்து கிடந்தது , அது இவ்ளோ நாள் நான் விவசாயம் பண்ணி வந்த பயிர்களை அழித்து கொண்டிருந்தது , இறந்து கிடந்த அந்த பன்றிக்கு இறுதி ஊர்வலம் நடத்தி புதைத்தேன் , ஆனால் கூட்டமே இல்லை


Matt P
டிச 18, 2024 22:13

அந்த இறந்து கடந்த கரும்பன்றியை உணவாய் நினைக்கிற இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கிருமிகளை கூட நீங்கள் பார்க்க முடியவில்லையா?


அப்பாவி
டிச 17, 2024 19:39

26 வருஷம் முன்னாடியே தூக்கில் போட்டிருந்தால் ஒரே எழவாப் போயிருக்கும். நமது உளுத்துப் போன சட்டங்களால் நாடே சீரழியுது.


Krishnamurthy Venkatesan
டிச 17, 2024 19:36

இதில் காங்கிரஸ், vck போன்ற கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டையும், நடந்த இந்த நிகழ்விற்கு ஆதரவா என்பதனையும் விளக்கிட வேண்டும்.


dandanakka
டிச 18, 2024 07:46

Krishnamurthy Venkatesan அவா்களே, அதில் என்ன சந்தேகம். கண்டிப்பாக vck, khancross, commis ஆதரவு இதற்கு உண்டு. நாளை இவர்கள் தைரியமாக சொல்வார்கள் எங்களுக்கு அமைதி மார்கத்தின் ஆதரவு போதுமென்று. இந்துக்களாகிய நாம் செய்வதறியாது நிற்கும் காலம் வெகு தூரமில்லை. Keralaவில் ஏற்கனவே நடந்தேரிக் கொண்டிருக்கின்றது.


M Ramachandran
டிச 17, 2024 19:22

தமிழக மக்கள் திருந்துவார்களா? அப்படி தான் இருப்பார்கள்


அப்பாவி
டிச 17, 2024 18:52

வளர எவ்ளோ பேருதவியா இருந்திருக்காரு. இவருக்கு இவ்வளவு மரியாதை செய்யலேன்னா எப்புடி ஓட்டு வுழும்? 2026 தேர்தல் நெருங்கிட்டிருக்கு வேறே


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 17, 2024 18:15

ஆமாம் RSS அமைப்பை நீங்கள் தான் யோக்கிய சிகாமணிகளாக காட்டுகிறீர்கள்


Murugesan
டிச 17, 2024 21:05

கேவலமான கேடுகெட்ட தீவிரவாதிகள ஆதரிக்கின்றவர் எப்படிப்பட்டவர் , குண்டு வைத்து 58 பேரை கொலை செய்த அயோக்கியனுங்களை ஆதரிக்கின்றவங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை