உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஜா புயலால் கோழிப்பண்ணை பாதிப்பு; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலால் கோழிப்பண்ணை பாதிப்பு; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை; கஜா புயலின்போது புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார் அருகே சேதமடைந்த கோழிப்பண்ணைக்கு இழப்பீடு கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.கொங்கதிராயன்பட்டி முனியன், சக்திவேல் தாக்கல் செய்த மனு: கொங்கதிராயன்பட்டியில் கோழிப்பண்ணை வைத்திருந்தோம். இதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்றிருந்தோம். 2018 நவ.16 ல் கஜா புயல் தாக்கியதில் கோழிப்பண்ணை முழுவதும் சேதமடைந்தது. 10 ஆயிரம் கோழிகள் இறந்தன. இழப்பீடு கோரி கலெக்டர், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர், குளத்துார் தாசில்தாருக்கு மனு அனுப்பினோம். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.அரசு தரப்பு: மனுதாரர்கள் வணிக நோக்கில் கோழிப்பண்ணை நடத்தினர். அது விவசாயம் சார்ந்த தொழிலின் கீழ் வந்தாலும், மனுதாரர்கள் ரூ.32 லட்சம் இழப்பீடு கோருகின்றனர். பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு பெற மனுதார்களுக்கு உரிமை உண்டு. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: கொட்டகை மற்றும் கோழிகளுக்கு இன்சூரன்ஸ் செய்யாமல் கோழிப்பண்ணையை மனுதாரர்கள் நடத்தினர் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது. கஜா புயலால் கோழிப்பண்ணைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க அரசை இந்நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. இம்மனு தகுதியற்றது; தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ