மின் உற்பத்தி நிறுத்தம்
சென்னை:துாத்துக்குடி மாவட்டம், வ.உ.சி., துறைமுகம் அருகில், மின் வாரியத்திற்கு சொந்தமான துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்றாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக, நேற்று முன்தினம் மாலை 6:40 மணி முதல், 40 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.