உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அணைகளை புறக்கணிக்கும் தமிழக அரசு; விவசாயிகள் கவலை

அணைகளை புறக்கணிக்கும் தமிழக அரசு; விவசாயிகள் கவலை

மதுரை: தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு மாநிலத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது : தமிழகம் முழுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவெடுத்ததாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் டெல்டா பகுதியில் அரசாணைக்கு புறம்பாக ஓ.என்.ஜி.சி., விண்ணப்பம் செய்துள்ளது. அதை சுற்றுச்சூழல் துறை பரிசீலித்து வருகிறது. இப்படி எல்லாமே முரண்பாடாக உள்ளது. அணையை கோட்டை விட்டது : உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி 2016 க்கு முன்பாகவே முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி தமிழக அரசு சாதனை படைத்தது. 142 அடி வரை நீரை தேக்கியிருந்தால் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பாசனநீர் கிடைத்திருக்கும். பேரிடர் காலத்தில் மட்டும் தான் 'ரூல் கர்வ்' முறை பயன்படுத்த வேண்டும். இந்தாண்டில் சராசரி மழைநாளில் கூட 142 அடி வரை நீரைத் தேக்க கேரள அரசு அனுமதிக்கவில்லை. இதை தமிழக அரசும் தட்டிக்கேட்கவில்லை. இதனால் வைகை அணையில் 67 அடிக்கு மேல் நீர் நிரம்பவில்லை என்பதை காட்டி 18 ம் கால்வாய் உட்பட பல்வேறு நீர்ப்பாசனங்களுக்கு நீர் திறக்கவில்லை. அணையில் 152 அடி வரை நீரை தேக்கி வைப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த வடகிழக்கு பருவமழை சீசனிலாவது 142 அடி வரையாவது நீரை தேக்கி வைக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி கூட முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு, பேபி அணை பலப்படுத்துவது போன்ற பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அசோகன்
அக் 18, 2025 16:00

4 லட்சம் கோடியா இருந்த கடனை 9 லட்சம் கோடியாக்கியாச்சு..... மத்திய கொடுக்கும் காசை மொத்தமும் நம்மகுடும்ப கணக்குல வரவு வச்சாச்சு....... அப்புறம் என்ன பழிய மத்திய அரசுமேல அடிமை ஊடகங்களை வைத்து போடவேண்டியதுதான்


Sundar
அக் 18, 2025 09:53

Thanking ancestor is ok, but the Govt has to manage day to day irrigation issues of the farmers and ensure proper planning happens for long term storage and distribution of water. Those aspects are to be monitored by the higher ups. Are they doing it with utmost concern for the farmers welfare? I doubt NO. Let the CM first dismantles Corruption that is existing everywhere which is a curse for TN.


KOVAIKARAN
அக் 18, 2025 09:44

அணைகளை புறக்கணிக்கும் தமிழக அரசு, தமிழக விவசாயிகள் கவலை என்பது தலைப்புச் செய்தி. இன்றைய தீய, ஊழல் திமுக ஆட்சியில், தமிழகத்தில் விவசாயிகள் மட்டுமா கவலைப்படுகிறார்கள்? லஞ்சம் கொடுக்காமல் காரியம் எதுவுமே ஆகவில்லையே என்று சாமானியர்கள் கவலைப்படுகிறார்கள். வாக்குறுதிப்படி செய்யவில்லை என்று ஆசிரியர்கள் கவலைப்படுகிறார்கள். கொராணா காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் மனைவிக்கு அரசு வேலை தருகிறோம் என்று தேர்தலில் கூறியவர்கள் நான்கு வருடங்கள் சென்றும், ஊழல் ஒன்றே லட்சியம் என்று ஆட்சிசெய்யும் ஊழல் அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று மருத்துவத்துறையில் உள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள். சாராயக்கடையை மூடுவோம் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு அதைச்செய்யாமல், மேலும் குடிகாரர்களை உருவாக்குவது என்று அரசு முனைந்துகொண்டிருப்பதால், சரியான வேலையாட்கள் கிடைக்கவில்லை என்று வணிகர்களும், தொழிலதிபர்களும் கவலைப்படுகிறார்கள். அதனால் வடமாநிலங்களிலிருந்து வேலையாட்களை கொண்டுவந்து அவர்கள் வியாபாரம், உற்பத்தி செய்துவருகிறார்கள். அறநிலைத்துறையின் கேடுகட்ட செயல்களினால், கோவில்களில் நிம்மதியாக தெய்வத்தை வழிபடமுடியவில்லை என்று பக்தர்கள் கவலைப்படுகிறார்கள். அரசு பள்ளியை கட்சி இடமாக பாவித்து திருட்டு திமுக கட்சி விளம்பரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்கள், அதனால், அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு கெடுகிறது என்று பொதுமக்களும், ஆசிரியப்பெருமக்களும் கவலைப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீரழிந்து உள்ளது, அதனால் பெண்கள் வெளியே சுதந்திரமாக போகமுடியவில்லை, என்று பெற்றோர்களும், கணவன்மார்களும், மற்றும் பொதுமக்களும் கவலைப்படுகிறார்கள். சாதிக்கலவரங்களை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். சட்டத்தைப்பாதுகாக்க வேண்டிய காவல்துறை திமுகாவின் அடிமை ஏவல் துறை ஆகிவிட்டது என்று அனைத்து மக்களும் கவலைப்படுகிறார்கள். மொத்தத்தில், இலவசத்திற்கு ஆசைப்பட்டு, அவசரப்பட்டு இந்த கேடு கேட்ட ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டோமே என்று தமிழக மக்களே இப்போது கவலைப்படுகிறார்கள்.


Indian
அக் 18, 2025 11:43

எல்லாத்துக்கும் காரணம் அந்த அரசை போய் கேளு


ராமகிருஷ்ணன்
அக் 18, 2025 09:44

திமுக தண்ணீர் அணையினை கவனிக்க நேரமில்லை, ஆர்வமில்லை


Indian
அக் 18, 2025 09:21

மத்திய அரசு பணமே தருவதில்லை , பின்னர் அணைகளை எப்படி பராமரிப்பது ?? / பணம் எல்லாம் உபி , பீகார் கு போகுது .


VENKATASUBRAMANIAN
அக் 18, 2025 07:58

எவ்வளவு அணைகள் திமுக கட்டியுள்ளனர். இன்றுவரை முல்லை பெரியாறு அணை பிரச்சினை தீரவில்லை. இவர்களது தோழமை கட்சிகள் மட்டுமே ஆண்டு வந்துள்ளது. இப்படியே எத்தனை காலம்தான் ஏமாற்று வருவீர்கள்.


கடல் நண்டு
அக் 18, 2025 07:58

பணத்தை சுருட்டுவதை மட்டும் பார்த்துக் கொண்டு அரசியல் செய்யும் இந்த திராவிடக்கூட்டத்திற்கு மற்றபடி அணையாவது ? கணையாவது்?? மக்கள் எக்கேடு கெட்டு போனாலும் அவர்களுக்கு கவலை இல்லை..


D Natarajan
அக் 18, 2025 07:53

ONGC ஐ எதிர்ப்பதை இந்த விவசயிகள் கை விடவேண்டும். தமிழன் ONGC ஐ எதிர்த்தால் , எல்லோரும் சைக்ளில் செல்ல வேண்டும். இலவச மின்சாரம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.


Vasan
அக் 18, 2025 07:15

This is a wrong propaganda, supported by anti-DMK people. Only a month back, our Honble CM went to UK and honoured the family of Colonel John Penny Cuick, who was instrumental in constructing in Mullai Periyaar Dam, 135 years back, around year 1890. This project helped irrigating various Tamilnadu districts today, such as Madurai, Dindigul, Theni, Ramanathapuram, Sivagangai. Which CM, in which part of the world will do this thankful act, like going from one part of the world to another part of the world, to thank ancestors? Those who complain about our CM, please turn back the pages of History book, read all the pages and then comment.


Ram
அக் 18, 2025 07:02

இந்திய முன்னேறவேண்டுமானால் மீண்டும் பிரிட்டிஷ் வந்தால்தான் முடியும், நம் கான்ஸ்டிடூஷன் இந்த அரசியல் போக்கிரிகளுக்கு துணைபோகிறது


புதிய வீடியோ