உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமவெளி பகுதியிலும் ஸ்க்ரப் டைபஸ் கர்ப்பிணியருக்கு கவனம் தேவை

சமவெளி பகுதியிலும் ஸ்க்ரப் டைபஸ் கர்ப்பிணியருக்கு கவனம் தேவை

சென்னை : மலைப் பகுதிகளை தாண்டி, ஒட்டுண்ணிகள், பூச்சிகளால் ஏற்படும், 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல், சமவெளி பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.'ஸ்க்ரப் டைபஸ்' என்பது, ஒரு வகையான பாக்டீரியா தொற்று. 'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் ஏற்படுகிறது.பாதிப்பு ஏற்பட்டோருக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றுடன் தடிப்புகள் ஏற்படுவதும் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இப்பாதிப்பால் ஆண்டுதோறும் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் மலைப் பகுதியிலும், செடிகள் மண்டிய இடங்களிலும் வசிக்கும் மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சமவெளி பகுதியிலும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அனைத்து பகுதியிலும், இவ்வகை காய்ச்சல் பரவி வருவதால், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த காய்ச்சலால், தினமும் 10 முதல் 20 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இது, மூன்று நாட்களில் குணமடையக்கூடியது. ஆனால், கர்ப்பிணியர் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள முட்செடிகளை அகற்றி, சுத்தமாக பராமரிக்க வேண்டும். செடிகள் மண்டிய இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது, பூச்சிகள், ஒட்டுண்ணிகள் உடல் மீது படாதவாறு தற்காத்துக்கொள்வது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ