உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கையில் கருங்காலி கோல் ஸ்டாலினை தொடர்ந்து பிரேமலதா

கையில் கருங்காலி கோல் ஸ்டாலினை தொடர்ந்து பிரேமலதா

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, சமீபகாலமாக கையில் கருங்காலி கோல் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறார். போகும் இடங்களுக்கெல்லாம் மறக்காமல் அதை எடுத்துச் செல்கிறார்.இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 'நண்பர் பரிசாகக் கொடுத்தது. வைத்திருந்தால், நல்லது நடக்கும் எனச் சொன்னார்கள். அதனால் வைத்திருக்கிறேன்' என்றார். ஆனால், தே.மு.தி.க., வட்டாரங்களில் கூடுதல் கருத்துச் சொல்கின்றனர்.ஜோதிடர்கள் அவர்கள் கூறியதாவது:கருங்காலி கோல் கையில் வைத்திருந்தால், சிறப்பான எதிர்காலம் இருக்கும் எனச் சொல்லி, ஜோதிடர்கள் சிலர், அரசியல்வாதிகளிடம் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.அந்த வகையில் தான், முதல்வர் ஸ்டாலினுக்கும் தகவல் போய், அவர் காலையில் வாக்கிங் போகும் போது, மறக்காமல் கருங்காலி கோல் எடுத்துச் செல்கிறார்.இதேபோல, ஏற்கனவே விஜயகாந்திடமும் சில ஜோதிடர்கள் சொல்லி உள்ளனர். ஆனால், அதை விஜயகாந்த் நம்பவில்லை. அதனால், கருங்காலி கோல் பயன்படுத்தவில்லை.தொடர் தோல்வி அரசியலில் அவருக்கு வரிசையாக சரிவு ஏற்பட்டதும், 'கருங்காலி கோல் வைத்திருந்தால், இந்த சரிவு ஏற்பட்டிருக்காது' என, விஜயகாந்தின் தொடர் தோல்விக்கு ஜோதிடர்கள் காரணம் கூறினர்.இது பிரேமலதாவுக்கும் சென்றது. அதையடுத்தே, அவர் கருங்காலி கோல் பயன்படுத்தத் துவங்கி உள்ளார். தொடர்ந்து, கருங்காலி கோல் பயன்படுத்தினால், விஜயகாந்துக்கு ஏற்பட்ட தோல்வி போல, அரசியல் ரீதியில் தனக்கு பின்னடைவு ஏற்படாது என, பிரேமலதா நம்புகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையில், விஜயகாந்த் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில், வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பிரேமலதா விரும்புவதாகவும், அதற்கான பணிகளைத் துவக்க, தன் கட்சியினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்த தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தன் கையில் கருங்காலி கோலுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

viki raman
ஆக 23, 2025 16:26

கூட்டணி சேர்ந்து விட்டோம் னு சிம்பலிக்க சொல்லுறாங்க பிரேம் லதா ஜி மேடம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2025 14:22

கரீட்டா சொல்லிப்போட்டீங்க . தமிழ் தமிழர் ன்னு கூவிக்கிட்டே தமிழர் பாரம்பரிய உடை அணிந்தால் ராசி பலன்படி சேதாரம் அதிகமாயிடும்ன்னு சொன்னதைக்கேட்டு பேன்ட் போட்டு கையில் கருங்காலிக் கம்போட சுத்தற ஆளோட பகுத்தறிவை என்னன்னு சொல்றது?


Thravisham
ஆக 23, 2025 14:07

விஜயகாந்த என்கிற நாராயண் சாமி நாய்டுவ வச்சி இந்த அம்மா முதல்வராக திட்டம் பலிக்குமா?


உ.பி
ஆக 23, 2025 13:46

பகுத்தறிவு பல் இளிக்குது


pakalavan
ஆக 23, 2025 11:46

ராமர் அணிலுக்கு கோடுபோட்டானு சொன்னா நம்பும் கூட்டம், ஐயாறு சொன்னாதான் கடவுளு வருவாருன்னு சொன்னா கேட்க்கும் கூட்டம், இங்க வந்து மூடநம்பிக்கையை பத்தி பேசுரானுங்,


Rajarajan
ஆக 23, 2025 11:43

அப்போ இதுக்குமுன்னால வாழ்க்கைல சாதிச்சவங்க எல்லாம், திறமை, முயற்சி, முன்னேற்றம், தியாகம் செஞ்சது எல்லாம் சும்மாவா ?? குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, தம்பி புரிந்து நடந்து கொள்ளடா. நம்பிக்கை வேறு, நடைமுறை வேறு. அப்போ கருங்காலிய கையில் வெச்சிக்கிட்டு வீட்டுலயே சும்மா உட்க்கார வேண்டியது தானே. வயிறு தானே நிறையுமே ??


Nagarajan D
ஆக 23, 2025 11:27

கருங்காலிகள் கருங்காலி வைத்துக்கொள்ளும்.. விஜயகாந்தை கீழே தள்ளி அவர் எழ முடியாமல் செய்து கருங்காலி இந்த அம்மையார்


Perumal Pillai
ஆக 23, 2025 11:14

பொம்பள கேடி .


sribalajitraders
ஆக 23, 2025 10:13

ஸ்டாலினும் பிரேமலதாவும் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா இந்த மாதிரி மூட நம்பிக்கையில் விழுந்திருக்க மாட்டிங்க


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2025 10:10

ஏனுங்க அம்மணி, நம்ம தனபாலு அண்ணாச்சிக்கு டவுட்டு வந்துட்டாம் . உங்களை சுத்தி பெரிய கருங்காலி கூட்டமே இருக்கும்போது கையில தனியா எதுக்கு கருங்காலின்னு கேக்காக .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை