உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

சென்னை: தமிழக காவல் துறையில், புதிதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. இப்படை போலீசாருக்கு, கடந்த 7ம் தேதியில் இருந்து, 13ம் தேதி வரை, ஒரு வாரத்தில், 225 புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்து, 22 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போன இரண்டு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகளை மீட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து உ ள்ளனர். குற்றம் நடக்க வாய்ப்புள்ள, 12,115 இடங்கள் அடை யாளம் காணப்பட்டு, அங்கு தொடர்ந்து ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவுசார் குறைபாடு உள்ள, 11 நபர்களையும், பள்ளி செல்லாமல் இருந்த, 40 மாணவர்களையும் மீட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளனர். இரண்டு குழந்தை திருமணங்களை தடுத்துள்ளனர். இத்தகவலை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ