வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சிறையில் அவனை நன்கு கண்காணிக்கவேண்டும். இல்லையென்றால் அவனது லீலைகள் அங்கேயும் தொடரும். குறிப்பாக அங்குள்ள பெண்கள், சிறுமிகள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
திருப்பூர்; காப்பகத்தில் இருந்த, 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய பாதிரியாருக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் அடுத்த கூனம்பட்டிப்புதுாரில், ஆதரவற்றோர் இல்லம் மற்றும் சர்ச் நடத்தி வந்தவர் ஆன்ட்ரூஸ், 48. கடந்த 2022 ம் ஆண்டு டிச., மாதம் அங்குள்ள, 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அவர் அத்துமீறி நடந்துள்ளார். கடந்த 2023 ஜன., மாதம் அச்சிறுமி இது குறித்து தன் தாயிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்தார். போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்ட்ரூஸை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில், நீதிபதி கோகிலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியிடம் அத்துமீறிய ஆன்ட்ரூஸூக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவனை நன்கு கண்காணிக்கவேண்டும். இல்லையென்றால் அவனது லீலைகள் அங்கேயும் தொடரும். குறிப்பாக அங்குள்ள பெண்கள், சிறுமிகள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.