உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மு.க.முத்து மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மு.க.முத்து மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார். அவரது மனைவி சிவகாம சுந்தரிக்கு, பிரதமர் மோடி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் மகன் மு.க.முத்து, நடிகர், இசைக் கலைஞர் என, பன்முக திறமை கொண்டவராக விளங்கினார். சினிமா, அரசியல் ஆகிய துறைகளில், அவர் ஆற்றிய பணிகளுக்காக, எப்போதும் நினைவுகூரப்படுவார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ