உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் மன்னர்கள் மீது பிரதமர் மோடிபற்றாக உள்ளார்: ராஜேந்திர பாலாஜி

தமிழ் மன்னர்கள் மீது பிரதமர் மோடிபற்றாக உள்ளார்: ராஜேந்திர பாலாஜி

சிவகாசி; ''பிரதமர் மோடி தமிழகம் மீதும் தமிழ் மன்னர்கள் மீதும் தமிழ் கலாசாரத்தின் மீதும் பற்றாக உள்ளார்,'' என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். சிவகாசியில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பலமாக உள்ளது. மோடி தமிழ் மன்னர்கள் , தமிழ் கலாசாரம், தமிழ் மீதும் பற்றாக உள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் அற்புதமான நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கின்றார். என்றைக்கும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் மோடி உள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடிய சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் மன்னர்களை பற்றியும் தமிழ் தலைவர்களை பற்றியும் தமிழகத்தின் வரலாற்று சுவடுகளை எடுத்துச் சொல்லி பேசுகின்ற தலைவராக பிரதமர் மோடி விளங்குவது தமிழகத்திற்கு பெருமை என்றார். கண்ணீர் சிந்திய முன்னாள் அமைச்சர் சிவகாசிக்கு ஆக. 7ல் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகுறித்து ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடந்தது. இதில் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: மோசடி வழக்கில் தி.மு.க., அரசு என்னை சிறையில் வைத்திருந்தபோது அ.தி.மு.க.,விற்கு எதிராக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள். தனிமை சிறையில் அடைத்து மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள். நான் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேனே தவிர அ.தி.மு.க.,வை காட்டிக் கொடுக்க மாட்டேன். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது. எதற்கும் நான் அஞ்சவில்லை. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. என்னை இரு முறை அமைச்சராக்கிய சிவகாசி தொகுதியில் தான் போட்டியிடுவேன். நிச்சயம் வெற்றி பெறுவேன், எனக் கூறிய நிலையில் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஜூலை 29, 2025 15:48

பிரதமர் மோடி அவர்கள் தமிழக மக்கள் மீது மட்டும் தான் பற்று இல்லாமல் இருக்கிறார் என்கிறாரா?


Premanathan S
ஜூலை 29, 2025 10:40

அவரு ஏதோ சபையில் கைதட்டு வாங்க பாராட்டி விட்டு சென்று விட்டார் இதையெல்லாம் அவர் நினைத்துக்கொண்டிருக்க மாட்டார் அவர் இந்நேரம் அடுத்த மீட்டிங், அடுத்த நாட்டுக்கு விஜயம் பற்றி யோசித்துக்கொண்டிருப்பார் இந்த முன்னாள் மந்த்ரி வேலை வெட்டி இல்லாதவர்


முக்கிய வீடியோ