உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி; பயணத்திட்டம் இதோ!

கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி; பயணத்திட்டம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கங்கை கொண்ட சோழபுரத்திற்கு, பிரதமர் மோடியின் வருகையின் பயணத்திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s19e36ot&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டினார். ஜூலை27ம் தேதி, ஆடித்திருவாதிரை நட்சத்திர தினத்தில் அவரது பிறந்த நாள். இந்த ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.பிரதமர் மோடி தமிழகம் பயணத் திட்டம் குறித்து விவரம் பின்வருமாறு: ஜூலை 26ம் தேதிஇரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமானநிலையம் வருகை.இரவு 8.30-9.30 மணிக்கு விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்பு.இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்து தங்குகிறார்.ஜூலை 27ம் தேதிகாலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 12 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு.மதியம் 2.25 மணிக்கு திருச்சி விமானநிலையத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 01:40

நல்வரவு


kannan
ஜூலை 23, 2025 00:25

தஞ்சைப் பெரியகோயிலுக்கும் வரவேண்டும்.


Vijay D Ratnam
ஜூலை 22, 2025 22:14

பிரதமர்,தமிழகம் வருகையின் போது காரைக்கால் பேரளம் அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடக்கி வைப்பார் என்ற செய்திகள் வந்ததே என்னாச்சு?


RAAJ68
ஜூலை 22, 2025 21:54

தஞ்சய் தானே கங்கைகொண்ட சோழபுரம் என்பது. அந்தக் கோயிலுக்குள் அரசியல்வாதிகள் செல்வதற்கு தயக்கம் காட்டுவார்களே. பதவி பறிபோய்விடும் என்ற மூடநம்பிக்கை மோடியின் விஷயத்தில் நிஜமாகவே நடந்து விடப் போகிறது ஏனென்றால் அவர் 75 வயதை கடக்க போகிறார் அவரை வெளியேற்ற பலர் துடித்துக் கொண்டுள்ளனர்.


பாரத புதல்வன்
ஜூலை 22, 2025 20:19

ஜெய் ஸ்ரீராம்..... ஹர ஹர மகாதேவ....


T.sthivinayagam
ஜூலை 22, 2025 20:05

பயண திட்டத்தால் பாஜாகா பலன் அடையுமா என்ற கேள்வி எழுகிறது


vivek
ஜூலை 22, 2025 21:03

கேள்வி எழுப்ப உனக்கு எந்த தகுதியும் இல்லை இருநூறு ரூபாய் சிவநாயகம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 22, 2025 23:13

பாஜகவிற்கு பலன் இருக்குமா இல்லையா என்பது முக்கியம் இல்லை. இந்துக்கள் இடையே ஒற்றுமை மேலும் வலுப்பெறும். திராவிட கட்சிகள் பலவீனம் அடையும். திமுகவினர் வாய் விட்டு அவப் பெயர் வாங்கப் போவது நிச்சயம்.


kannan
ஜூலை 23, 2025 00:27

தஞ்சைப் பெரிய கோவிலுக்கு வந்தால் உலகமே பலன் பெறும்.


kannan
ஜூலை 23, 2025 00:30

விவேக், ஆம் எல்லா இந்துக்களும் பலன் பெறுவர். பெருவுடையார் தவறான நபர்களுக்கு என்ன கொடுப்பார் என்று எல்லோருக்கும் தெரியும்.. 75 வேறு அருகில் உள்ளதே


புதிய வீடியோ