உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிங்கம்புணரி பள்ளி மாணவர் சாவில் தாளாளர், தலைமையாசிரியர் கைது

சிங்கம்புணரி பள்ளி மாணவர் சாவில் தாளாளர், தலைமையாசிரியர் கைது

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளி மாணவன் இறந்த சம்பவத்தில் மாணவன் காரை விட்டு இறங்கவில்லை என டிரைவர் கூறிய நிலையில் டிபன்பாக்ஸ் காலியாக இருந்தது எப்படி என பெற்றோர் கேள்வி எழுப்புவதால் மர்மம் நீடிக்கிறது. பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் வேங்கைப்பட்டியை சேர்ந்த மாணவன் அஸ்விந்த். சிங்கம்புணரி ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் ஜூன் 30ல் மர்மமான முறையில் இறந்தார். ரத்த காயங்களுடன் அவரது உடலை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போட்டு விட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓடிவிட்டனர். நீதி விசாரணை வேண்டி உறவினர்கள் 7 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.தற்காலிக சமரசம் ஏற்பட்டு மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.நேற்று காலை மாணவனின் தந்தை பாலமுருகன், உறவினர்கள் போலீஸ் நிலையம் முன் கூடினர். மாணவனை அழைத்துச் சென்ற அதே காரில் தான், உடலையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்து போட்டுள்ளனர். அந்த காரில் உள்ள தனது மகனின் ஸ்கூல் பேக், சாப்பாடு பை ஆகியவற்றை சோதனை செய்ய வலியுறுத்தினர்.தடயவியல் அலுவலர் காரை திறந்து ஆய்வு செய்தபோது மாணவனின் மதிய உணவு டப்பா காலியாக இருந்தது. புத்தக பையை டி.எஸ்.பி., செல்வகுமார் உள்ளே எடுத்துச்சென்றார். அதை வெளியில் வைத்தே திறந்து காட்ட பெற்றோர் வலியுறுத்தினர். அதற்கு டி.எஸ்.பி., மறுத்தார். இதனால் உறவினர்கள் போலீஸ் நிலைய வாசலில் மறியலில் ஈடுபட்டனர்.பஸ் ஸ்டாண்ட் அருகே பெண்கள் மறியல் செய்தனர். அமைச்சர் பெரியகருப்பன், சப்--கலெக்டர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அவர்களை சூழ்ந்துகொண்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறியலால் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.அஸ்விந்த் உடலை மருத்துவமனையில் போட்டுவிட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓட்டம் பிடித்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.டிரைவர் ஜான்பிரிட்டோவிடம் போலீசார் விசாரித்த போது, பள்ளி வேன் பழுதான நிலையில் 6 மாணவர்களை காரில் அழைத்துச் சென்றதாகவும், பள்ளியில் அஸ்விந்த் காரை விட்டு இறங்காததை கவனிக்காமல் கதவை சாத்திவிட்டு சென்று, மாலை கதவைத் திறந்த போது அஸ்வின் உள்ளே மூச்சு திணறி இறந்து கிடந்ததாகவும் டிரைவர் தெரிவித்துள்ளார். மாணவன் வகுப்புக்கு வராததால் ஆப்சென்ட் போட்டதாக பள்ளி சார்பில் போலீசில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்த பெற்றோர், எதற்காக தங்கள் குழந்தைக்கு வலிப்பு வந்தது என்று கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், மதிய உணவு கொடுத்து விட்ட டப்பாவில் இருந்த உணவை மாணவன் சாப்பிட்டுள்ள நிலையில் எப்படி வகுப்பறைக்கு வராமல் இருக்க முடியும், தண்ணீர் பாட்டில், மூடி எப்படி காருக்குள் தனியாக சிதறி கிடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினர்.மாணவனின் சித்தப்பா தினேஷ், தனது 5 வயது மகள், மாணவர் அஸ்விந்த் தன்னுடன் காரில் இருந்து இறங்கி வகுப்பறைக்கு வந்ததாகவும், மதியம் சாப்பிட்டதாகவும் கூறியதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.

தாளாளர் தலைமையாசிரியர் கைது

மாணவரின் தந்தை பாலமுருகன் கூறும்போது, பள்ளியில் வேறு ஒரு சம்பவத்தில் தனது மகன் இறந்து விட்ட நிலையில் அதை மூடி மறைக்க நிர்வாகம் கட்டுக்கதை கட்டி திசை திருப்பி உள்ளதாகவும், போலீசாரும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.இந்நிலையில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பள்ளி முதல்வர் சிவகாமி 60, அவரது கணவர் தாளாளர் சங்கரநாராயணன் 62, சிவகாமியின் மகன் மகேஸ்வரன் 22, வாகன மேற்பார்வையாளர் ஜான்பிரிட்டோ 33 ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sridhar
ஜூலை 02, 2025 11:14

கண்துடைப்பு வழக்கு போடப்படும். இவர்களுக்கு வேண்டியவங்க நடத்தற ஸ்கூல் .


Bhaskaran
ஜூலை 02, 2025 09:34

பெரீரீய்........ய கருப்பன் விஷயத்தை குழிக்குள் ஆழபுதைத்திடுவார்


Padmasridharan
ஜூலை 02, 2025 08:59

பணம் கொடுத்தால் எல்லா குற்றங்களையும் மறைக்கும் காவல்துறைதான் இந்நாட்டில் செயல்படுகின்றது சாமி. காக்கிச்சட்டை போட்ட அதிகார பிச்சைக்காரர்களும் சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் தேவையில்லாத கேள்விகளை கேட்டும், ஒருமையில் பேசியும். .


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 07:36

இப்போது எங்கள் தானை தலைவர் இருந்திருந்தால் ..அற்புதமாக கடிதம் எழுதி பிரச்சினையை திசை திருப்பியிருப்பர்.. ஏன் இதே போன்ற சாவுகள் மொகலாயர்கள் ஆட்சியில், பிரிட்டிஷ் காரர்கள் ஆட்சியில் கருமை வீரர் காமராஜர் ஆட்சியில், அருமை நண்பர் எம்ஜிஆர் ஆட்சியில் அம்மையார் ஆட்சியில் நடக்கவில்லையா .அப்போது ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருந்தன .இது சாமானியனின் ஆட்சி என்பதாலேயே ..ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி விடலாம் என்று உயர் சாதியினர் மனப்பால் குடிக்கிற்றனர்.. இதை கேட்டவுடன் உடன்பிறப்பே உனக்கு விலாநோக சிரிக்க தோன்றுகிறதல்லவா? சிரித்துக்கொண்டே கழக வளர்ச்சி நிதியை தலைமை கழகத்திற்கு அனுப்பிவை ..


Svs Yaadum oore
ஜூலை 02, 2025 06:55

பள்ளி கல்வித்துறையில் அறுபது சதம் மேல் மதம் மாற்றும் கும்பல் ....இந்த துறை மத மாற்றிகள் பிடியில் ....இது மாறாத வரையில் இந்த துறை உருப்பட வாய்ப்பே இல்லை ...


Svs Yaadum oore
ஜூலை 02, 2025 06:52

இது என்னய்யா விடியல் அரசாங்கம் நடக்குது ??....இந்த விடியல் பள்ளித்துறையை விட கேவலமான ஒரு துறை தமிழ் நாட்டில் கிடையாது ...மாணவன் உடலை மருத்துவமனையில் போட்டுவிட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓட்டமாம் .....வேறு ஒரு சம்பவத்தில் மாணவன் இறந்து விட்ட நிலையில் அதை மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் கட்டுக்கதை ......போலீசாரும் அவர்களுக்கு ஆதரவு .....இந்த ஆட்சி வந்ததிலிருந்தே பள்ளி கல்வி துறை படு மோசமாக சீரழிந்தது ....


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 07:25

தமிழக மக்கள் தொகையை குறைக்க அரசு ஆவண செய்து கொண்டிருக்கிறது ..வேறு என்ன சொல்வது


Arun, Chennai
ஜூலை 02, 2025 06:38

50% of Police personnels are accused these days, may be they are fed up of charging criminals n they have started performing the same... crime everywhere in TN under the able administration of TN DAD(A).


நிக்கோல்தாம்சன்
ஜூலை 02, 2025 06:23

காவல்துறை என்று ஒன்று இருப்பது தலைவலிதான் , பேசாமல் அதனை கலைத்துவிட்டு அதற்குண்டான அமைச்சரும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 07:27

தமிழக காவல்துறை மிகவும் திறமை மிக்கது ..ஆனால் அதை நிர்வகிப்பவர்கள் அரசியல் வாதிகள் ..ஒரு ஐ பி எஸ் அலுவரை எட்டாவது தாண்டாத தற்குறி ஆணை பிறப்பித்து கட்டு படுத்ததும் ... என்ன செய்வது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை