கைதிகள் ஆல் பாஸ்
கோவை:கோவை மத்திய சிறையில், 21 தண்டனை கைதிகள், இரண்டு விசாரணை கைதிகள் என, 23 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 42 வயதான பாஸ்கர் என்ற கைதி, 600க்கு 448 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். 33 வயதான ஹரிகிருஷ்ணன் 430 மதிப்பெண், 39 வயது துளசி கோவிந்தராஜன், 429 மதிபெண் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளை, சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தில்குமார் பாராட்டினர். அதே போல சேலம் சிறையில் தேர்வெழுதிய 8 கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். தண்டனை கைதி தனிவளவன், 511, விசாரணை கைதி முருகன், 508, தண்டனை கைதி வசந்த குமார், 491 மதிப்பெண்கள் முறையே பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களை சிறை கண்காணிப்பாளர் வினோத் பாராட்டினார்.