உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால் பொருட்களின் விலையை குறைத்த தனியார் நிறுவனங்கள்; அரசின் ஆவின் நிறுவனம் மறுப்பு

பால் பொருட்களின் விலையை குறைத்த தனியார் நிறுவனங்கள்; அரசின் ஆவின் நிறுவனம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றப்பட்டதால், தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலையை குறைத்துள்ளன. ஆனால், தமிழக அரசின் ஆவின் நிறுவனம், விலையை குறைக்க மறுத்துள்ளது. ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, பால் பவுடர், வெண்ணெய், நெய், பனீர், இனிப்பு வகைகள் என, 120க்கும் அதிகமான பால் பொருட்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. மத்திய அரசு ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றி அமைத்ததில், வெண்ணெய், நெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு, பால் பொருட்கள் விலையை குறைத்துள்ளன. அதேபோல, ஆவின் பால் பொருட்கள் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நெய் விலையை மட்டும் லிட்டருக்கு, 40 ரூபாய் குறைத்துள்ளது. வெண்ணெய், பனீ ர் விலையை குறைக்கவில்லை.

இதுகுறித்து, ஆவின் மேலாண் இயக்குநர் அண்ணாதுரை வெளியிட்ட அறிக்கை:

ஆவின் விற்பனை வாயிலாக வரும் வருவாயில், 90 சதவீதத்திற்கு மேல் பால் உற்பத்தியாளர் களுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது. ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் வைத்து, சந்தையில் குறைவான விலையில், தரத்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்கிறது. ஜி.எஸ்.டி., குறைப்பு மற்றும் பண்டிகை கா ல சலுகையாக நெய் லிட்டருக்கு, 40 ரூபாய் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., விகிதம் குறைக்கப்பட்டதன் அடிப்படையில், ஆவின் நிர்வாகம் விலையை குறைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., தலைவர் தினகரன் ஆகியோர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

NATARAJAN R
செப் 23, 2025 18:03

கடந்த மாதம் ஒரு நிருபர் தமிழக அமைச்சரிடம் விலைவாசி உயர்வு பற்றி கேட்டார். அமைச்சர் உடனே ஜி எஸ் டி வரி விதிப்பு காரணமாக விலை வாசி உயர்வு. எனவே நீங்கள் மத்திய அரசிடம் கேட்டு ஜி எஸ் டி குறைக்க உதவலாம் என்று நிருபரிடம் சொன்னார். இப்போது மத்திய அரசு ஜிஎஸ்டி குறைத்து விட்டது. மீண்டும் வேறு அமைச்சர் இது பற்றி கேட்டால் ஜி எஸ் டி குறைந்ததால் தமிழக அரசு கோடிகணக்கில் வருவாய் இழப்பு என பேட்டி தருகிறார். ஏற்கெனவே பால் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டது. ரயில் கட்டணம் ஒரு கிமீக்கு சில பைசா க்கள் உயர்த்த தமிழக முதல்வர் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று கொதித்தது நினைவில் கொள்ள வேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 23, 2025 12:44

டாஸ்மாக் சரக்கு கஞ்சா மெத்தா பெட்டமைன் ஆகியவை எப்பொழுது விலை குறையுமோ அன்று ஆவினும் விலை குறைக்கும்.


Shankar C
செப் 23, 2025 10:41

ஜி எஸ் டி வரி குறைப்பால் விலை குறைப்பில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமே இந்த மாதிரி குறுகிய எண்ணத்தில் வியாபார நோக்கில் செயல் பட்டால் என்ன செய்வது? இந்த ஏமாற்று நிலையை மற்ற வியாபார நிறுவனங்கள் பின் தொடர்ந்தால் ஜி எஸ் டி 2.0 காற்றில் கரைந்த பெருங்காயமாக போகும்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே... வரி சீர்திருத்தம் ஏட்டளவில் மட்டுமே என மாறும் நிலை உருவாகும் முன்பே தகுந்த நடவடிக்கை தேவை. ஜி எஸ் டி குறைப்பு பயன் மக்களுக்கு உண்மையில் சென்று சேர வேண்டிய வகையில் சட்டம் வேண்டும்.


duruvasar
செப் 23, 2025 09:21

தமிழ்நாட்டில் போலீஸ் இருந்தாலும் கொலை குற்றங்கள் போதை பொருட்கள் விற்பனை ஏறிகொண்டே போவது போல் தான் இதுவும். Makkal தான் கேள்வி கேட்கவேண்டும்.


aaruthirumalai
செப் 23, 2025 08:29

தரமானது?????


Natarajan Ramanathan
செப் 23, 2025 08:05

மத்திய அரசு ஜி.எஸ்.டி., விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது. ஆவின் நிறுவனம் பண்டிகை கால சலுகையாக நெய் லிட்டருக்கு, 40 ரூபாய் விலை குறைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு குறைத்தால் அதை மாற்றி அமைத்துள்ளது என்றும் இவர்கள் தற்காலிகமாக விலையில் சலுகை கொடுத்தால்கூட அதை விலை குறைப்பு என்று வார்த்தை ஜாலம் செய்வது திராவிட ஏமாற்று வித்தைதான். நவம்பர் முப்பதுக்கு பிறகு சத்தமில்லாமல் சலுகை வாபஸ் ஆகிவிடும். திருட்டு திராவிடம்.


Nandakumar Naidu.
செப் 23, 2025 06:20

public must boycott aavin.


Elango
செப் 23, 2025 10:08

பிறகு வேறு எதை வாங்குவது மற்ற நிறுவனங்கள் பால் பொருட்களை வாங்கினால் தேவை அதிகரிக்கும் அளிப்பு குறையும் உடனே விலையை ஏற்றுவார்கள் ஆவின் என்ற போட்டி இருப்பதால் தான் தனியார் நிறுவனங்கள் ஏகபோகம் தடுக்கப்படுகறது