உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கிகளில் கல்வி கடன் பெறுவதில் சிக்கல்; உயர்கல்வியிலும் அதிகரிக்கிறது இடைநிற்றல்

வங்கிகளில் கல்வி கடன் பெறுவதில் சிக்கல்; உயர்கல்வியிலும் அதிகரிக்கிறது இடைநிற்றல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி : உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, கல்விக்கடன் வழங்கும் போது, வங்கிகளில் கல்வி கட்டணம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுவதால், பிற செலவினங்களை சமாளிக்க வழியின்றி, உயர்கல்வியில் இடைநிற்றல் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 படித்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வகையில் 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரி படிப்புகள் மற்றும் கல்லுாரி சார்ந்த விபரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு, 'கல்லுாரி கனவு' முகாம் நடத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில், வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் குறித்தும், கல்விக்கடன், வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகள் குறித்த விபரங்களை வழங்குகின்றனர். குறிப்பாக, மாணவர் ஒரு கல்லுாரியில் சேர விருப்பம் தெரிவித்தால், அக்கல்லுாரி தொடர்புடைய வங்கியுடன் மாணவர் விபரம் 'லிங்க்' செய்யப்படுகிறது. தவிர, அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை குறிப்பிட்டு ரசீது பெற்றாலும், உரிய பாதுகாப்பு ஆவணங்கள் சமர்ப்பித்தால் மட்டுமே, வங்கிக் கடன் வழங்கப் படுகிறது. மேலும், ஹாஸ்டல், புத்தகம், தேர்வு கட்டணத்துக்கு கடன் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு, உரிய கல்வி கடன் பெற்று, கல்லுாரியில் மாணவர்கள் சேர்ந்தாலும், இதர செலவுகளால் திணறி, மாணவர்கள் ஓராண்டுக்குப் பின் படிப்பை தொடர முடிவதில்லை, என அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: 'கல்லுாரி கனவு' முகாம் வாயிலாக, தனியார் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கவே முற்படுகின்றனர். கல்விக் கடன் பெற்றுத் தருவதற்கான வங்கிகள் குறித்த விபரம் மட்டுமே அளிக்கின்றனர். இதற்காக, பள்ளி அளவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து செல்லவே அனுமதிக்கப்படுகிறது.கிராமங்களைச் சேர்ந்த, ஏழை எளிய மாணவர்கள், கல்விக் கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில், விரும்பும் கல்லுாரியில் சேர முடிவதில்லை. உரிய பாதுகாப்பு ஆவணங்கள் சமர்ப்பித்து கல்விக்கடன் பெற்றாலும், விடுதி, உணவு, உடை உள்ளிட்ட பிற செலவினங்களால், செய்வதறியாது திணறுகின்றனர். இரண்டாம் ஆண்டு, வங்கிக் கடன் தவணை பெறுவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், கல்லுாரி படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.அதன்பின், அவரவர் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லுாரி யில் சேருகின்றனர். எனவே, கல்லுாரி கனவு நிகழ்ச்சியை நடத்துவதை காட்டிலும், அரசு கல்லுாரிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். காலத்துக்கு ஏற்ற புதிய படிப்புகளை கொண்டு வருவதுடன், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதன் வாயிலாக, ஏழை எளிய மாணவர்களின் கல்லுாரி படிப்பும் நனவாகும். இவ்வாறு, கூறினர்.

உரிய ஆவணம் இருந்தால் கடன்!

வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது: வங்கிகள் கோரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், கல்விக் கட்டணம் மட்டுமின்றி தேர்வு, ஹாஸ்டல் மற்றும் புத்தகங்களுக்கான செலவினத்தையும், கடனாக பெற முடியும். மேலும், படிப்புக்கு ஏற்ப 'லேப்டாப்', கல்வி சுற்றுலா, பயிற்சி உள்ளிட்டவைகளுக்கு அக்கல்லுாரி வழிகாட்டுதலுடன் கடன் தொகை பெற முடியும்.கடன் பெறும் மாணவர்கள், தங்களது கல்லுாரி படிப்பை முடித்தால், அதற்கான தொகையை வங்கிக்கு தவணை முறையில் செலுத்த, ஓராண்டு வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்துக்குள் அவர் பணிக்கு சென்று, பணத்தை செலுத்த தவறினால், அவர்களது பெற்றோர் வாயிலாக பணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். யு.ஜி., முடித்து, பி.ஜி., படிக்க விரும்பினால், அந்த இரு ஆண்டுகளுக்கும் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. பி.ஜி., படிப்பு முடித்தவுடன் அதற்கான தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

visu
மே 13, 2025 15:39

எல்லாம் பழம் மாதிரி விதிகள் ஆனால் நேரில் சென்றால் கல்வி கடன் வழங்க ஆயிரம் இடைஞ்சல்கள் .கடன் பெறுவோரும் அதை திருப்பி செலுத்த எண்ணுவதில்லை


ஆரூர் ரங்
மே 13, 2025 12:25

ஆளும் கட்சி கல்வித் தந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்கு வேறு பெயர் கல்விக் கடன்.


அஜய்
மே 13, 2025 11:04

எல்லாரும் கடனோ ஒடனோ வாங்கி படிச்சிட்டு வாங்க. ரெண்டு கோடி வேலை வீணப் போகுது. ஆளே கிடைக்காம ரிடையர் ஆனவங்களுக்கு எக்ஸ்டென்சன் குடுக்கறாங்க.


M S RAGHUNATHAN
மே 13, 2025 09:03

This educational loan is itself a scam. It has only helped substandard engineering colleges to thrive. The former Union Minister P Chidambaram is one of the major culprit. He directed all the PSBs that the Educational loans should not be denied under any circumstances and warned and cautioned the Bank Managers of dire consequences, if the loans were denied. He indirectly said the very fact that the student is eligible to join any educational course is an indication that the student is meritorious and loan should be sanctioned without any questions. There was no balancing mechanism. If a student does not clear the I year, the Banks could not withhold loan installment for subsequent years. It is ridiculous. No accountability both on the part of student and the parents. If a survey could be taken, then it will reveal how many students consistently failed to clear the exams. How a student who completed the course after several attempts can get a gainful job. The mushrooming growth of engineering colleges, teachers training colleges, management colleges added fuel to this. Many of the colleges mentioned above started many courses without proper approval or affiliations and admitted students violating the norms just like that. The parents and students fell prey to these institutions. Not surprising that students who studied in those "uppuma" institutions now suffer. They are working as Swiggy, zomato, flipkart, Amazon delivery boys. Many are working as call drivers, call taxi drivers etc. This is a classic case of how a foolish, selfish politician could destroy a banking tem. It is very difficult to get out for the Bank, students and parents.


Kjp
மே 13, 2025 09:01

தொண்ணூற்று ஐந்து சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.நீவேற போவியா.


GMM
மே 13, 2025 08:35

தனியார் கல்லூரிகள், பெற்றோர் சொத்தை ஈடாக பெற்று கல்வி கடன் தரவும். பிரசவ, கல்வி, திருமண, சுய தொழில், வீட்டு கடன் என்று தள்ளுபடி ஆகும் என்ற எதிர் பார்பில் கடன் வாங்குவது குறையும். திருமணம் புரிய போலி பட்டம் வழங்கும் தனியார் கல்லூரிகள் குறையும். தொழில் நுட்ப படிப்புகள் தான் கடன் வசூலிக்க தீர்வு.


raja
மே 13, 2025 07:35

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைபதை போல கூமுட்டைகள் கல்வி வங்கி கடன் ரத்து செய்வோமுண்ணு கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு பின் ரத்து செய்யலைன்ன இப்படித்தான் நடக்கும்...


குரு, நெல்லை
மே 13, 2025 07:32

வங்கிகள் கடன் கொடுக்க தயார். ஆனால் சில கல்வி நிறுவனங்கள் அரசாங்கம் நிர்ணயித்தது விட அதிகம் தொகை கேட்கிறார்கள். Rs.40000 ஒரு செமஸ்டர் செலவு என்றால் RS.28000 மட்டுமே உரிய ரசீது கொடுக்கின்றனர். இது எந்த வகையில் நியாயம். அதுவும் ஹாஸ்டல் ஃபீஸ் மற்றும் மெஸ் பில் 60 சதவிகித கட்டணத்திற்கு தான் ரசீது கொடுக்கின்றனர். இது வங்கியின் தணிக்கையின் போது தெள்ள தெளிவாக தெரிகிறது. மாணவர்களிடம் கேட்டால் இது குறித்த புரிதலே இல்லை. ஆதலால் எவ்வளவு பணத்திற்கு ரசீது கொடுக்கிறார்கள் என்று முன்பே மாணவர்களிடம் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு கடன் அளிக்கின்றனர். கணக்கில் வராமல் உள்ள பணத்தினை பெற்றோர்கள் கையில் இருந்து கொடுக்க வேண்டும். எப்படி வீடு வாங்கும்போது 30 சதவிகிதம் ப்ளாக்கில் வாங்குகிறார்கள் அது போல இங்கேயும் ஆரம்பித்து விட்டார்கள்.


GSR
மே 13, 2025 07:26

உரிய ஆவணம் இருந்தால் - இருந்தா .....KYC அப்டேட் கூட ஆகமாட்டேங்குது.


R.RAMACHANDRAN
மே 13, 2025 07:09

இந்த நாட்டில் மோசடி பேர்வழிகள் ஆயிரக்கணக்கான கோடிகள் வங்கி கடன் பெரும் நிலையில் நேர்மையானவர்கள் சில லட்சம் கடன் பெற முடியவில்லை. எல்லாம் லஞ்சம் செய்கின்ற மாயம். லஞ்சம் கொடுத்து அந்த கடனை திருப்பி செலுத்தாமல் தப்பி சென்று வெளி நாடுகளில் தஞ்சம் அடையும் வரை கண்டு கொள்வது இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை