உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு தயாரிப்பாளர்கள் குமுறல்

 திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு தயாரிப்பாளர்கள் குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில், அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு, அடுத்தாண்டு பிப்ரவரி, 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலை சந்திக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில், 1,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதைய தலைவராக, 'தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7cbjkoih&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விருப்பம்

தமிழ்குமரன், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர், துணை தலைவர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசவும், படம் தொடர்பான சிக்கல்கள், நடிகர்களின் சம்பளம் மற்றும் படத்தயாரிப்பு செலவு, வினியோகத்தில் உள்ள பிரச்னைகளை சுமுகமாக தீர்க்கவே, தயாரிப்பாளர் சங்கம், 1998ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுவரை இச்சங்கம் சந்தித்த தேர்தல்களில், அரசியல் தலையீடுக்கு இடமே இல்லாமல் இருந்து வந்தது. அதை தொடரும் வகையில், தற்போதும் எல்லாரும் கூடி பேசி, போட்டியின்றி தலைவரை தேர்வு செய்ய, சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அப்படியே போட்டி ஏற்பட்டாலும், அதை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும், தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், அதற்கு எதிராக, ஆளும் கட்சியை சேர்ந்த தயாரிப்பு நிறுவன முக்கிய நிர்வாகி செயல்பட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பலரை, தன் பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்திற்கு அழைத்து பேசி வருகிறார். அதன் வாயிலாக, ஆளும் கட்சிக்கு ஆதரவானவர் என்ற போர்வை யில், தனக்கான ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று, நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு

இதற்காக, முதல்வர் குடும்பத்தினர் பெயரையும் பயன்படுத்தி வருகிறார். ஆனால், இந்த விஷயம், ஆளும் கட்சி மேலிடத்திற்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது. படத் தயாரிப்பு நிறுவனத்தை கவனிக்கும் ஆளும் கட்சியின் இளம் வாரிசுக்கு பக்க பலமாக உள்ள அந்த நிர்வாகி, தயாரிப்பாளர் சங்கத்தையே தன் கையில் வைத்துக்கொள்ள திட்டமிட்டு, இப்படி சங்க விதிகளுக்கு மாறாக செயல்படுவதாக, தயாரிப் பாளர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

surya krishna
நவ 17, 2025 21:38

இதுதான் திராவிடியன் ஸ்டாக்


திகழ்ஓவியன்
நவ 17, 2025 12:27

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தல், ::: எப்படி எல்லாம் திட்ட மீட்டு அவதூறு , இன்னும் வேட்பாளர் யார் யார் என்று தெரியலை அனால் ஆளும்கட்சி தலையீடு


Amar Akbar Antony
நவ 17, 2025 08:39

அனுபவி இராஜா அனுபவி. தீயவர்க்கு ஆதரவு கொடுத்தால் இப்படித்தான் அழ வேண்டும்.


SIVA
நவ 17, 2025 07:59

தமிழ் சினிமா என்று ஒன்று இருந்தால் தானே இனிமேல் கட்சி ஆரம்பிப்பீங்க , அதேயே முடிச்சுட்டா எப்படி எங்க ஐடியா ....


D Natarajan
நவ 17, 2025 07:51

கேடுகெட்ட அரசியல் ஆளும் கட்சி. தேர்தலை மே 26 க்கு ஒத்தி வையுங்கள்.


Ramesh Sargam
நவ 17, 2025 07:38

ஆளுங்கட்சி என்று பொதுவாக கூறுவதைவிட, துணை முதல்வர் உதயநிதி தலையீடு என்று கூறலாம்.


Srinivasan Narasimhan
நவ 17, 2025 06:27

இந்த லட்சனத்தில் ஜனநாயகத்த காப்பாத்தராங்க


Sun
நவ 17, 2025 06:23

ஆக்டோபஸ் கைகளின் கீழ் ஒட்டு மொத்தத் தமிழகமும் ! இதில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மட்டும் விதிவிலக்கா என்ன?


Thravisham
நவ 17, 2025 05:49

சோ ஒரு முறை சொன்ன மாதிரி ஆயாவின் ஆப்பக் கடையும் விட்டு வைக்க மாட்டார்கள் திருட்டு த்ரவிஷ முதல் குடும்பம்


ராமகிருஷ்ணன்
நவ 17, 2025 05:36

திமுக ஆட்சியில் இருந்தால் இப்படிதான் இருக்கும். உங்கள் உழைப்பை திருடி அவர்கள் காசாக்க பார்ப்பார்கள். மேலும் அவர்களின் ஊழலில் சம்பாதிக்கும் பணத்தை பெருக்க திரைபட துறையில் முதலீடு செய்வார்கள் நஷ்டம் வந்தாலும் பெரிய அளவில் லாபம் பார்த்து விட்டதாக கணக்குகள் காட்டுவார்கள். கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக்க அருமையான வழி. அதனால திமுக ஆட்சிக்கு வந்தால் திரைப்படம் எதுவும் எடுக்காமல் இருப்பது நல்லது. மேலும் ஜாதி வெறியை தூண்டும் படங்களை எடுத்து மக்களை குழப்பி கலவரம் உண்டாக்கி லாபம் பார்க்கிறார்கள். திமுக ஆட்சி திரைத்துறைக்கு கேடு