உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பப் பழக்கம் படுகுழியில் தள்ளியது; விடுதியில் சிக்கி தவித்த பெண் மீட்பு

பப் பழக்கம் படுகுழியில் தள்ளியது; விடுதியில் சிக்கி தவித்த பெண் மீட்பு

சென்னை : தோழியுடன் விடுதி அறையில் தனிமையில் இருக்கும் காட்சியை, வீடியோ அழைப்பில் நண்பர்களுக்கு விருந்து படைக்க முயன்ற வாலிபரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், 21 வயது பெண். இவர், சென்னை மேற்கு தாம்பரத்தில் தங்கி, ஸ்ரீபெரும்புதுாரில்உள்ள நிறுவனத்தில்வேலை பார்த்து வருகிறார்.மது பழக்கம் உள்ள இவர், சென்னை கிண்டியில் உள்ள, 'பப்' ஒன்றுக்கு செல்வது வழக்கம். அந்த, 'பப்'புக்கு, நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த ஷாகின், 23, என்பவரும் செல்வது வாடிக்கை.இளங்கலை பட்டதாரியான இவர், சென்னையில் செருப்பு கம்பெனியின் 'டீலர்' ஆக செயல்பட்டு வருகிறார். இருவரும் அறிமுகமாகி, ஓராண்டாக பழகி வந்துள்ளனர். இருவரும் மது போதையில் மிதந்துள்ளனர். மூன்று நாட்களாக, சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு, 1:00 மணியளவில் இருவரும்சேர்ந்து இருக்கும் காட்சியை, தன் நண்பர்களுக்கு விருந்தாக்கும் வகையில், அவர்களுடன் ஷாகின், 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிறார் என, கருதினார். இதனால், மொபைல் போனுடன் கழிப்பறைக்குள் புகுந்து பூட்டிக் கொண்டுள்ளார். ஆபத்தான இடத்தில் இருப்பது பற்றி, உடன் பணிபுரியும் தோழிக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தான் இருக்கும் இடம் குறித்து, 'வாட்ஸாப் ஸ்டேட்டஸ்' வைத்து உள்ளார். இதை பார்த்த அவரின்உறவினர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, திருவான்மியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ., ராஜா மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று, இளம்பெண்ணை மீட்டுள்ளனர். ஷாகினை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Padmasridharan
ஜூன் 28, 2025 10:23

இதே திருவான்மியூரில் கடற்கரை பகுதியில் பல காவலர்கள் அங்கு வருபவர்களிடம் மிரட்டி அடித்து phone புடுங்குவதும் password திறக்க வைத்து பணம் பறிப்பதும் வண்டியில் உட்கார வைத்து அறைக்கு கூட்டி சென்று காமத்தொல்லைகள் கொடுப்பதும் நடக்கின்றது. இந்த இடம் pub இல்லையே படுகுழியில் தள்ளுவதற்கு. இதையும் கவனிப்பார்களா. . நல்ல உள்ளம் படைத்த ராஜாக்கள்


Guru
ஜூன் 25, 2025 22:02

தமிழ் நாட்டு கலாச்சாரத்தையே சீரழித்தவர்கள் இந்த தி.க.,திருட்டு முன்னேற்ற கட்சி.


magan
ஜூன் 25, 2025 16:34

பையன் பேரை பார்த்து உஷாரா இருக்க வேண்டாமா உங்களுக்கு அப்படி என்ன sugam


Suppan
ஜூன் 25, 2025 13:24

அந்த ராம் சாமி எல்லோரையுமே சகட்டு மேனிக்கு அவமதித்தார். தன சாதிக்காரரான கீழ்வெண்மணி புகழ் கொலைகார நாயுடுவை தூக்கிப்பிடித்தார். எப்படி ஹிட்லர் தான் வெல்வதற்காக எல்லாப்பழியையும் யூதர்களின் மேல் போட்டு அவர்களை சித்திரவதை செய்தானோ அதே வழியைத்தான் திருட்டு திராவிடர்கள் கடைப்பிடித்தனர். திராவிடம் என்ற பெயருக்கே களங்கம் விளைவித்தனர். ராமசாமி பேசிய பெண்ணுரிமையின் லட்சணம் எல்லோருக்கும் தெரியும். முக்கியமான கட்சிக்காரர்கள் அதைப்பற்றிப்பேசினார்கள் ஆனால் ஒருத்தனும் வாழ்நாளில் கடைப்பிடித்ததில்லை.


Sivagiri
ஜூன் 25, 2025 12:15

பெற்றோர்கள், பெண் பிள்ளைகளை வெளி ஊருக்கு வேலைக்கு அனுப்பி விட்டு, சிவனேன்னு ஊர்ல உக்காந்துக்கிட்டு இருந்தால் இப்படித்தான்.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வீடியோ காலில் பேசி என்ன செஞ்சிக்கிட்டு இருக்கிறார்கள் என்று கண்காணித்துக் கொண்டே இருந்தால்தான், பிள்ளைகளுக்கு நேர் வழி தெரியும்... இல்லாவிடில், இப்படியான வழிகளில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது . . .


Thravisham
ஜூன் 25, 2025 11:36

த்ரவிஷ நாட்டில் எல்லாமே சாத்தியம்


baala
ஜூன் 25, 2025 12:49

இதெல்லாம் தனிமனித ஒழுக்கம்


Amar Akbar Antony
ஜூன் 25, 2025 10:55

கேட்கவே மாட்டீர்கள் உ பி சுகளா? அப்புறம் இவனுங்களுக்கு வாக்கு அளித்து அரியணையில் அமர்த்தியுளீர்களே உங்களைத்தான் கேட்கிறேன் வாய்ப்பு இருந்ததால்தான் ஒருவன் அல்லது ஒருத்தி பயன்படுத்துகிறான். அப்படிப்பட்ட குற்றம் தான் இது. குடி என்பது குடும்பத்தை கெடுக்கும் என்பது தெரிந்தே ஒருவன் உற்பத்தி செய்கிறான் அதை ஒருவன் விற்கிறான். அவனுங்களுக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அதை குடிப்பவன் குடும்பத்தில் பிணம் விழுகிறது. இப்போ போதைபொருட்கள் வேரு இவற்றையெல்லாம் சந்தைக்கு கொண்டுவந்தவன் யாருடா? எளிதில் கிடைக்க வழிசெய்பவன் எவண்டா?


தஞ்சை மன்னர்
ஜூன் 25, 2025 10:52

இங்கே அறிவு கொளுந்துகள் பெரியாரை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு கருத்து பதிவு இடுகின்றனர் ஆனால் பெரியாரின் பெண் உரிமை என்பது அவர்களின் சட்டப்பூரவர்மன் பாலின உரிமை மட்டுமே சொல்லி இருந்தார்


sridhar
ஜூன் 25, 2025 13:52

மகள் தந்தையை மணப்பது சட்டபூர்வமா . உளறல் .


நாஞ்சில் நாடோடி
ஜூன் 25, 2025 14:09

21ம் பக்கத்தில் பெரியாரின் பெண்ணுரிமை விளக்கப்பட்டுள்ளதாம் ...


theruvasagan
ஜூன் 25, 2025 23:14

தம்பி இதுவரைக்கும் 21ம் பக்கத்தை பற்றி கேள்விப்பட்ட மாதிரி தெரியலையே. அதான் இப்படி.ஒரு முரட்டு முட்டு குடுக்குது.


Yasararafath
ஜூன் 25, 2025 10:52

இதற்கு முழு காரணம் பெண்கள்.பெண்கள் மீது வழக்கு தொடர்ந்து பெண்களை சிறையில் அடைக்கனும்


theruvasagan
ஜூன் 25, 2025 10:49

கோகைன்.கஞ்சா மெத்து இதல்லாம்தான் போதை பொருட்கள். பீர் விஸ்கி ஒயின் ரம் இதல்லாம் போதை பொருள் கிடையாது. உடலுக்கு சக்தி தரும் உற்சாக பானங்கள். இதுதான் அரசாங்கங்களின் கொள்கை.