உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பதால் ஆவேசம்; பொதுமக்கள் கோபம்; தி.மு.க., வார்டு செயலாளர் ஓட்டம்

வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பதால் ஆவேசம்; பொதுமக்கள் கோபம்; தி.மு.க., வார்டு செயலாளர் ஓட்டம்

கோவை: கோவையில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த, அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்காமல் இருப்பதால், துாய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சமரசம் செய்ய வந்த, தி.மு.க., வார்டு செயலாளரிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டதால், அவர் ஓட்டம் பிடித்தார்.கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், உக்கடம் சி.எம்.சி., காலனியில் வசித்தனர். மேம்பாலப் பணிக்காக, அவர்களது வீடுகளை இடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதேயிடத்தில் குடியிருப்பு கட்டித்தருவதாக உறுதி கூறியதால், வீடுகளை காலி செய்தனர்.மொத்தம், 520 வீடுகள் கட்ட வேண்டும்; முதல்கட்டமாக, 222 வீடுகளே கட்டப்பட்டிருக்கின்றன. கடந்தாண்டு அக்., 31ல் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தி.மு.க.,வுக்கு முன்னுரிமை

துாய்மை பணியாளர்களில், தி.மு.க.,வை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க, கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுப்பதால், ஐந்து மாதமாகியும் இன்னும் பயனாளிகளுக்கு ஒதுக்கவில்லை. இச்சூழலில், நாளை (26ம் தேதி) குலுக்கல் முறையில் வீடு ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.தி.மு.க.,வினர் தலையிட்டு குலுக்கலை நிறுத்தியுள்ளனர். இதையறிந்த துாய்மை பணியாளர்கள், பூட்டை உடைத்து குடியிருப்புகளுக்குள் செல்ல முடிவெடுத்து, நேற்று குடியிருப்பு வளாகத்தில் திரண்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தடுத்தனர். துாய்மை பணியாளர்களை சமரசம் செய்ய, தி.மு.க., வார்டு செயலாளர் ஆனந்தன் அங்கு வந்தார்.அவர் கூறுகையில், ''அதிகாரிகளிடம் நான் தான் பேசினேன். 222 வீடுகளுக்கு, 308 டோக்கன் போடுகிறார்கள். வெள்ளை டோக்கன் வந்தால் வீடு கிடையாது; நீல நிற டோக்கன் வந்தால் வீடு என கூறுகிறார்கள். இதை ஏற்க முடியுமா. 222 வீடுகளுக்கு, 222 டோக்கன் போட்டால் போதும் என கூறியுள்ளேன்,'' என்றார்.

'உங்களுக்கு என்ன வேலை'

அவரை அங்கிருந்தவர்கள் சூழ்ந்து, 'இந்தப் பிரச்னைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். எங்களுக்கு இங்கு வீடு இருக்கிறது. உங்களுக்கு இங்கு வீடு இல்லை; நீங்கள் ஏன் வருகிறீர்கள். ஒரு வீடு இல்லாமல் தகர கொட்டகையில் வசிக்கிறோம். ஏற்கனவே வீடு வாங்கியவர்களுக்கு இரண்டாவது வீடு, மூன்றாவது வீடு கேட்பது ஏன்' என, வாக்குவாதம் செய்தனர்.இரு தரப்புக்கும் இடையே, காரசாரமாக வாக்குவாதம் ஏற்பட்டு, மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இதையடுத்து, ஆனந்தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்தார்.இதன்பின், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் வெங்கட், உதவி பொறியாளர் ராஜேஷ் வந்து, 'அடுத்த மாதம் குலுக்கல் போடலாம்' என, கூறினர். அதை பொதுமக்கள் ஏற்காததால், 'அலுவலகத்துக்கு நாளை (இன்று) வாருங்கள்; பேசிக் கொள்ளலாம்' என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Oru Indiyan
மார் 26, 2025 11:07

போராளி கை உயர்த்தி பேசும் காட்சி தேர்தலில் மிகபெரிய போராட்ட போஸ்டர் ஆக போகிறது.


Rengaraj
மார் 26, 2025 10:28

தூய்மை பணியாளர்கள் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள். அவர்கள் வாழ்க்கையில் விளையாடலாமா? வீடு கட்டிக்கொடுங்கள் கொடுக்காமல் இருங்கள், மேம்பாலம் கட்ட தொடங்கும் முன்னர் குறைந்த பட்சம் அவர்களுக்கு இழப்பீடு வழங்கியிருக்கவேண்டாமா ? என்ன நிர்வாகமோ ?


अप्पावी
மார் 26, 2025 10:17

அடடே... எல்லாருக்கும் ஜீ வூடு குடுத்து முடிப்பதாகச் சொல்லி சாவியும் குடுத்தாரே. எங்கே போயிருந்தீங்க?


MUTHU
மார் 26, 2025 11:38

தன் மாநிலத்தில் யார் யாருக்கு வூடு இல்லைன்னு அந்தந்த மாநில அரசு விவரம் கொடுத்தால் தான் மத்திய அரசுக்கு தெரியும்பா. இதிலேயே பித்தலாட்டம் இருந்தால் என்ன செய்ய.


Ganapathy
மார் 26, 2025 14:15

டேய் நீ அப்பாவி இல்ல அடப்பாவி


अप्पावी
மார் 26, 2025 10:16

மூணு வூடு இருந்தால் மூவாயிரம் பேர் எனக்கு குடு உனக்கு குடுன்னு வர்ராங்க.


rasaa
மார் 26, 2025 10:00

விரைவில் முடிவெடுங்கள். இல்லையென்றால் துப்புறவு தொழிலாளர்கள் என்ன செய்வார்கள் என தெரியும்.


sankaranarayanan
மார் 26, 2025 07:57

திராவிட மாடல் அரசில் இதெல்லாமே சகஜமப்பா இதில் கைதேர்ந்தவர்கள் அவர்களுக்கு நிகர் யாருமே கிடையாது முட்டாள்தனமாக மக்கள் அவர்களுக்கு வாக்குகளை கொடுத்துவிட்டு நாடே இப்பொது தவித்துக்கொண்டிருக்கிறது எல்லாவற்றிலும் கமிஷன் இல்லாவிடால் அடி உதை வெட்டு இதுதான் நடப்பு


முக்கிய வீடியோ