உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுப்பணி துறை தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி காத்திருப்பு போராட்டம்

பொதுப்பணி துறை தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி காத்திருப்பு போராட்டம்

சென்னை:தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறை தினக்கூலிப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, 55 மணி நேர காத்திருப்பு போராட்டம், சென்னையில் நேற்று துவங்கியது. சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சி ராணி தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறையில் தினக் கூலிப் பணியாளர்களாக பணி யாற்றி, 10 ஆண்டை நிறைவு செய்த, 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுகுறித்து துறை அதிகாரிகள், 2011ல் அரசுக்கு அனுப்பிய கோப்புகள், இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளன. எங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட ஊழியர்கள் பட்டியலில், 222 பேர், 2012ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். விடுபட்ட எங்களை இன்று வரை நிரந்தரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை