உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு கட்டுமான பணியில் தரம் முக்கியம்; சில இடங்களில் தரம் இல்லை என்கிறார் சிதம்பரம்!

அரசு கட்டுமான பணியில் தரம் முக்கியம்; சில இடங்களில் தரம் இல்லை என்கிறார் சிதம்பரம்!

சிவகங்கை:''அரசு திட்டங்களில் கோடிக்கணக்கில் முதலீடு என்பது மட்டும் போதாது. தரமும் முக்கியம். அரசு கட்டடங்கள், பாலம், நெடுஞ்சாலை, மாவட்ட சாலை எல்லாம் தரமாக இருக்க வேண்டும். சில இடங்களில் தரமாக இல்லை,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் நகர் காங். அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தமிழக பட்ஜெட் குறித்து கூறியதாவது: தமிழக அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது. முதலில் நிதி மேலாண்மையை பாராட்டலாம். தமிழக அரசின் மொத்த கடன் 9 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்தில் அடங்கும். 3 சதவீததில் நிதிப்பற்றாக்குறையை அடக்கியது பாராட்டுக்குரியது. மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 4.1 சதவீதம் ஆகும். 2022ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றபோது வருவாய் பற்றாக்குறை 62 ஆயிரத்து 320 கோடி ரூபாய் ஆகும். தி.மு.க., ஆட்சியின் இறுதி ஆண்டில் தற்போது 41 ஆயிரத்து 610 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதாவது 21 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது.இரண்டாவதாக, 2025-26 பட்ஜெட்டில் அரசு சார்பில் முதலீடு 57 ஆயிரத்து 231 கோடி ஆகும். நடப்பாண்டை விட 22.4 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலீடு செலவுக்கேற்பத்தான் வளர்ச்சி இருக்கும். தமிழ்நாடு பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சிபெற்றுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதற்கு 57,231 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள்.முதலீடு செய்வது, திட்டங்களை நிறைவேற்றுவது சரிதான். ஆனால் தரத்தையும் பார்க்க வேண்டும். பல இடங்களில் தரமாகவும், சில இடங்களில் தரம் குறைவாகவும் உள்ளது. முதலீடு, எண்ணிக்கை மட்டும் போதாது. தரத்தையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.மொத்தச் செலவில் கல்வித்துறைக்கு 55 ஆயிரத்து 210 கோடி ரூபாய் ஒதுக்கி கல்விக்கு முதலிடம் அளித்துள்ளனர். சுகாதாரத்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி ரூபாய், சமூகநலத்துறைக்கு 8 ஆயிரத்து 597 கோடி ரூபாய், தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினருக்கு 3ஆயிரத்து 924 கோடி ரூபாய் என்று கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களை செம்மையாக நிறைவேற்ற வேண்டும். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற்றத்தை தவிர்க்க முடியாது. தமிழகத்தில் நகர்புற மேம்பாட்டிற்கு 34,396 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சிக்கு ரூ 29,465 கோடி ரூபாய் மொத்தம் ரூ 65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில்களை ஊக்குவிக்க வங்கிகள் மூலம் 2லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டுள்ளனர். வங்கிகள் இழுத்தடிப்பார்கள். கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுக்கு 7 கோடி ஒதுக்கீடு, மானாமதுரை அரசு கலைக்கல்லூரி அனுமதி.சென்னைக்கான 4 அறிவிப்புகள் கவர்ந்தன. சென்னை அருகில் 2000 ஏக்கரில் உலகம் தழுவிய நகர், ரூ 350 கோடியில் 2.25 டி.எம்.சி. கொள்ளளவில் 6வது நீர்த்தேக்கம், அண்ணா பல்கலைக்கு ரூ500 கோடி, சென்னை விஞ்ஞான மையத்திற்கு ரூ 100 கோடி ஒதுக்கியுள்ளனர். பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 3 சதவீதத்திற்கு கட்டுப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆண்டு கடைசியில் தான் அடக்கினார்களா இல்லையா என்பது தெரியும். மத்திய அரசு பட்ஜெட்டின் 4.1 சதவீத நிதிப்பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தியுள்ளது.மதிப்பீடு செய்யவில்லை. பட்ஜெட்டில் நல்ல அம்சங்களைச் சுட்டிக் காட்டியுள்ளேன். அதே நேரத்தில் திட்டங்களை செம்மையாக அமல்படுத்த வேண்டும். கோடிக்கணக்கில் முதலீடு என்பது மட்டும் போதாது. தரமும் முக்கியம். அரசு கட்டிடங்கள், பாலம், நெடுஞ்சாலை, மாவட்ட சாலை எல்லாம் தரமாக இருக்க வேண்டும். சில இடங்களில் தரமாக இல்லை.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Satish NMoorthy
மார் 16, 2025 11:31

The real saint is speaking.. he and his son should be imprisoned for many illegal activities


கிளார்க்
மார் 16, 2025 07:51

பஞ்சாயத்து டெண்டர் பணிகளுக்கு 40 பர்சண்ட் கமிஷன். ஒன்றிய தலைவர் 10 பர்சண்ட். மீதமுள்ள தொகையில் வேலை செய்யும் போது இவ்வளவு தான் செய்ய முடியும்


தனி
மார் 16, 2025 03:45

இந்த ஆள் கொள்ளையடித்து உலகெங்கும் முதலீடு செய்து வெட்கம்மற்று பேசுகிறார்


MARUTHU PANDIAR
மார் 16, 2025 00:47

மீண்டும் உளர வந்துட்டாப்ல கிங் பின் என்னும் இந்த பிசிர் ஆந்தையார். ...உனக்கெல்லாம் நாட்டைப் பற்றிய அக்கறைன்னு ஏதாவது உண்டா என்ன?எதற்காக இப்படி எதோ அக்கறை இருப்பதை போல பாசாங்கு செய்யணு ம், பேசாம மூடிக்கிட்டு உக்காரு அப்படீங்கறாங்க


A1Suresh
மார் 15, 2025 22:24

திராவிட அரசின் கட்டுமானங்களில் தரத்தை எதிர்பார்க்க கூடாது. அவை பூசிய மாதிரியும் இருக்கும் . பூசாத மாதிரியும் இருக்கும். இது எல்லாம் தொழில் நேக்கு மா


M Ramachandran
மார் 15, 2025 20:29

எந்த அரசைய்ய குறைகூறு கிறீர்கள் என்பதை தெளிவாக கூறி யிருக்கலாம். உமக்கு வேலை எல்லாம் கிடையாது. அப்போதைக்கு அப்போ ஜனங்கள் மறந்திடாமல் இருக்க மூஞ்சியாய் ஊடகங்களுக்கு காட்டணும்.


Ramesh Sargam
மார் 15, 2025 20:15

தரத்தை பற்றி பேச சிதம்பரத்திற்கு அருகதை இல்லை.


Rajasekar Jayaraman
மார் 15, 2025 19:53

அதை ஒரு ஏமாற்றுக்காரன், திருடன் சொல்வது தான் அதிசயம்.


Kjp
மார் 15, 2025 19:41

வர வர உங்கள் கருத்துக்களிலும் பேச்சிலும் தரம் மிக குறைந்து வருகிறது.


C.SRIRAM
மார் 15, 2025 19:36

ஏதோ தூக்கத்திலிருந்து எழுந்து தீடீரென "காந்தி செத்துட்டாரா " என்பது போல உளறுகிறார் . அரசின் எந்த திட்டத்திலும் தரம் இல்லவே இல்லை . ஸ்மார்ட் நகர வேலைகள் சமீபத்திய உதாரணம் . வரி கட்டுபவருக்கு நாம் கட்டும் வரி நாட்டுக்கு ஏதாவது ஒருவகையில் தரத்தை உயர்த்தப்போகிறது என்கிற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை . அரசியல் சிஸ்டம் கொஞ்சம் கூட சரியில்லை


புதிய வீடியோ