உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மோடி நிகழ்ச்சி குறித்த கேள்வி

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் மோடி நிகழ்ச்சி குறித்த கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில், பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி குறித்த கேள்வி இடம் பெற்றிருந்தது. தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் சுரங்க அளவர், தொல்லியல் துறை இளநிலை பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை இளநிலை வரை தொழில் அலுவலர் உட்பட 58 பதவிகளில், மொத்தம் 1,910 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக, டிப்ளமா மற்றும் ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று நடத்தியது. இந்த தேர்வில் பங்கேற்க, 76,974 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 51,416 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள 25,558 பேர், அதாவது, 33.20 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், இந்த தேர்வில், பொது அறிவு பாடத்தில், தமிழக அரசின் திட்டங்கள், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. கேள்வி எண் 162ல், '2025ம் ஆண்டின் முதல் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் மோடி உரையாற்றிய நாள்' என்ற கேள்விக்கு, ஜனவரி 14, 19, 26 மற்றும் மார்ச் 30 என, நான்கு விடைகள் வழங்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V Venkatachalam
செப் 01, 2025 19:46

டோபாவை பத்தியும் டோபாவை எப்புடி தலையில் வைப்பது என்பது பற்றியும் அது யார் வைத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்றும் அதை யார் தயார் பண்ணுகிறார்கள் எத்தனை தயார் பண்ணுகிறார்கள் அதற்குரிய பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா அல்லது ஃப்ரீயா என்பது பற்றியும் கேள்வி இருந்தால் க.உ.பி களின் மகிழ்ச்சிக்கும் ஆராவாரத்துக்கும் அளவே இருக்காது. அந்த கேள்வி இல்லை யென்பதால் இங்கே ஓரே அலப்பறையா இருக்கு. க.உ.பிங்க கேடு கெட்ட ஜென்மங்கள்.


சிந்தனை
செப் 01, 2025 14:25

அறிவை வளர்க்கும் கேள்விகளே தேவையில்லை முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதில் எழுதினால் பெரிய படித்தவன் என்று சான்றிதழ்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 01, 2025 10:07

ஊழலுக்கு எதிரான ஆட்சி.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 01, 2025 10:05

இந்திய இறையாண்மைக்கு எதிரான மக்களுக்கு விரோதி தேச பிரிவினைக்கு எதிரான விரோதி என்பதே சரியானது.


Tamilan
செப் 01, 2025 08:49

மக்கள் விரோதி, தேச விரோதி, ஊழல் மன்னனின் ஆக்கிரமிப்பு கல்வி துறையையும் விடவில்லை


V Venkatachalam
செப் 01, 2025 22:17

அடடா என்ன இப்புடி தமிழ் நாடு கல்வி தந்தைகளை கேவலமா சொல்லிப்புட்டீக. ஆனா நீங்க அப்புடி சொன்னது சரிதான். ராமசாமி நாயக்கன் அப்பவே சொன்னான் தமிழ் தங்க தட்டில் வைத்து மம் ன்னு. அது கரீட்டுதான். அதனால்தான் தமிழ் பரீட்சையில் 47000 மாணவர்கள் பெயில். தமிழ் யாவாரிங்களும் கல்வி தந்தைகளும் தமிழ் தேறாதுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டானுங்க. ஏன்னு கேட்டா ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்றானுவோ. தமிழ் இப்புடி ஆயிட்டேன்னு வருத்தமாயிருக்கு.. தமிழன் அப்புடீன்னு பேரு வச்சிகிட்டு தமிழ் வாழ்கன்னு மொட்டை சுவர் முட்டு சுவர் எல்லாத்திலேயும் கருப்பு சிவப்பு பெயிண்ட் அடிச்சு எழுதி வச்சிருக்கானு ங்க. பார்க்கலாம் தமிழ் எப்புடி வளரப்போவுதுன்னு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை