உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இப்படியும் ஆளுங்க இருக்கீங்களா? ஆச்சரியமாக கேட்ட அமைச்சர் மதிவேந்தன்

இப்படியும் ஆளுங்க இருக்கீங்களா? ஆச்சரியமாக கேட்ட அமைச்சர் மதிவேந்தன்

சென்னை : ஈரோடு மாவட்டம், கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப் பகுதிகளில் வசித்து வரும் 35,000க்கும் மேற்பட்ட மலையாளி சமூகத்தினர், பட்டியலின பழங்குடி பிரிவில் சேர்க்கப்படாததால், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என, அனைத்து நிலைகளிலும் பின்தங்கி உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, இச்சமூக மக்கள் போராடி வருவதாக, தமிழ்நாடு செடியுல்டு ட்ரைப் மலையாளி பேரவையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அப்பேரவை ஒருங்கிணைப்பாளர் முருகன் கூறியதாவது: தர்மபுரி, சேலம், திருச்சி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், மலையாளி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மலையாளம் பேசக்கூடிய கேரளாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. காலங்காலமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்ட மலைப்பகுதிகளில் வாழக்கூடியவர்கள். இவர்களில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அந்தியூர் வட்டங்களில் அமைந்துள்ள கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப் பகுதிகளில் வசிக்கும் மலையாளி சமூகத்தினர் தவிர, இதர மாவட்டங்களில் வசிப்போர், பழங்குடியினர் என, அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மலையாளிகள் மட்டும், பழங்குடியினர் என அங்கீகரிக்கப்படவில்லை. இம்மக்களின் நீண்ட கால கோரிக்கை, இவர்களை பட்டியலின பழங்குடி பிரிவில் சேர்ப்பதுதான். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால், இம்மக்கள் ஜாதி சான்றிதழ் பெற முடியாமல், அரசின் அனைத்து நலத்திட்டங்களில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2022 முதல், 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், மலையாளிப் பழங்குடி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தும், கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளை கேட்டால், தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதங்களை அனுப்பி வருவதாக கூறுகின்றனர். ஆனால், மத்திய அமைச்சர்கள் கூறுகையில், 'பட்டியலின பழங்குடிகளில் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான பரிந்துரையை, மாநில அரசே மேற்கொள்ள வேண்டும். துறை அமைச்சர்கள் வெளியிடும் அரசாணை அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' என்கின்றனர். இதுகுறித்து, அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து பேசியபோது, 'இப்படியொரு மலையாளி சமூகம் இருப்பதே தெரியாது; இப்போது தான் கேள்விப்படுகிறேன்' என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

rasaa
மே 16, 2025 12:49

முதலில் யார் இந்த மதிவேந்தன்? கேள்விபடாத பெயராக உள்ளதே. எந்த விஐபி யின் மகன்?


Sangi Saniyan
மே 16, 2025 17:09

கேட்டுடார் உலக புகழ் வி ஐ பி மகன் ராசா மகன்..


VENKATASUBRAMANIAN
மே 16, 2025 09:48

இப்போதுதான் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் போலும்.


karthikeyan
மே 16, 2025 09:36

தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டது நல்ல விஷயம். அதே சமயம், ஒட்டு வங்கியை மட்டும் பார்க்காமல் இந்த பிரச்சினையை சரி செய்ய என்ன செய்யப்போகிறார் என்று அமைச்சர் சொல்லிருந்தால் நல்ல மாற்றமாக இருக்கும்.


Yes your honor
மே 16, 2025 09:18

இந்தப் பேருடன் ஒரு அமைச்சர் இருப்பதே தெரியாதே. எந்தத்துறையைச் சார்ந்த அமைச்சர் இவர்? திமுக அமைச்சர் என்றால், இவரின் துறையில் என்னென்ன ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன? கண்டிப்பாக ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்திருக்கும். ஹலோ ஈ.டி. இன்கம் டேக்ஸ் ஸ்டார்ட் ஆல் வண்டிஸ்.


vee srikanth
மே 16, 2025 12:13

சரியான கேள்வி - இப்படி அமைச்சர் இருக்கிறாரா ??


subramanian
மே 16, 2025 09:11

எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. அமைச்சருக்கு தெரியாதது குற்றம் அல்ல.


N Annamalai
மே 16, 2025 08:08

atleast now minister go to erode and put a camp for this and complete it immediately.how government is ing new tasmac shop within two days .


Mani . V
மே 16, 2025 04:14

"......இப்படியொரு மலையாளி சமூகம் இருப்பதே தெரியாது இப்போது தான் கேள்விப்படுகிறேன் என்கிறார்...... ஆமாம் இவரு பெரிய வெள்ளைக்காரத்துரை. இங்குள்ளது இவருக்குத் தெரியாது.


இராம தாசன்
மே 16, 2025 04:03

இவர் மாநில அமைச்சரா இல்ல மத்திய மந்திரியா?


புதிய வீடியோ