உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுலின் முதிர்ச்சியற்ற தன்மை... மார்க்சிஸ்ட் கண்டனம்; இண்டி கூட்டணியில் புகைச்சல்

ராகுலின் முதிர்ச்சியற்ற தன்மை... மார்க்சிஸ்ட் கண்டனம்; இண்டி கூட்டணியில் புகைச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மார்க்சிஸ்ட் குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிய கருத்துக்கு இடது சாரிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது இந்தப் பேச்சு முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கேரளாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து சித்தாந்த ரீதியாக களத்திலும், கருத்துகளிலும் போராடி வருவதாகவும், அவர்கள் மக்களை பற்றி நினைப்பதில்லை என்று கூறி, இண்டி கூட்டணியில் அவர் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்த்து பேசியதற்காக ராகுலுக்கு கம்யூனிஸ்ட்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில், ராகுலின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கை; மதவெறி பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றை சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா?, எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, காங்கிரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இண்டி கூட்டணியில் இருந்து ஆம்ஆத்மி கட்சி வெளியேறியது. தற்போதுஇடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புகைச்சல் ஏற்பட்டிருப்பது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

கண்ணன்
ஜூலை 21, 2025 11:59

என்ன செய்வது, ஏழாம் வகுப்பே தாண்டாதவர்களும், பள்ளிப் படிப்பை ஏனோ தானோ என முடித்தவர்களும் appeasement of minorities செய்தலாவது ஏதாவது ஓட்டு விழுமா என்று பார்க்கின்றனர். அவர்களது குறைந்த அளவான படிப்பினால் ஏதும் புரியாமல் பிதற்றிக் கொள்கன்றனர். இவர்களது புள்ளிக்கூட்டணியன் உண்மை நிலை வெளியே வருகிறது


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 21, 2025 10:01

முஸ்லிம் கிறிஸ்துவ அல்லது வேற்று மதத்தவரை காசு கொடுத்து அல்லது காதல் வலையில் வீழ்த்தி மத மாற்றம் செய்து உள்ளதா. கிறிஸ்துவ முஸ்லிம் மத நம்பிக்கைகளை இழிவு படுத்தி பேசியுள்ளாதா. இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு ஏதாவது சிறப்பு சலுகைகள் கொடுத்துள்ளதா. பின்னர் எதை வைத்து பாஜகவை மத கட்சி என்று கூறுகிறார்கள். முஸ்லிம்கள் குண்டு வைக்கிறார்கள் அப்பாவி மக்களை கொல்கிறார்கள். லவ் ஜிஹாத் செய்து ஏழை பெண்களை ஏமாற்றுகிறார்கள். கிறிஸ்துவர்கள் காசு கொடுத்து அப்பாவி மக்களுக்கு தவறான வாக்குறுதி கொடுத்து மத மாற்றம் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த கம்யூனிஸ்ட்களும் திராவிட கட்சிகளும் துணை போகிறார்கள். இவர்கள் மத சார்பற்ற கட்சிகளாம். இன்னும் எவ்வளவு காலம் தான் இந்த போலி மதச்சார்பின்மை வைத்து மக்களை கேலி செய்ய போகிறீர்கள். நீங்கள் பசுத்தோல் போர்த்திய புலி என்பதை மக்கள் கண்டு கொண்டதால் தான் தற்போது திராவிட கட்சிகளிடம் இருந்து பணம் பெற்று அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை. வெட்கமாக இல்லை.


பேசும் தமிழன்
ஜூலை 21, 2025 07:53

இந்த கம்மிகள் முதலில் நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும்....தப்பி தவறி இவர்கள் வெற்றி பெற்றாலும்.... கான்கிராஸ் கட்சிக்கு தான் ஆதரவு கொடுக்க போகிறார்கள்.... ஆனால் வெளியில் இரண்டு பேரும் எதிரிகள் போன்று நடிப்பார்கள்..... எதற்க்கு காதை சுற்றி மூக்கை தொட்டு கொண்டு.... பேசாமல் கான் கிராஸ் கட்சிக்கே ஓட்டு போட்டு விடலாமே ???


panneer selvam
ஜூலை 20, 2025 22:22

In Kerela , political situation is totally different as ruling Marxist party has to be opposed by main opposition party Congress . If Congress does not pro against Marxist under the banner of INDI alliance , then BJP will become the main party in lieu of Congress . Another point , whatever Tamilnadu Marxist leader opposition to Rahuls speech at Kerela is nothing but farce and no one is going to bother .


theruvasagan
ஜூலை 20, 2025 21:31

பலே. பலே. இண்டி கூட்டணியில் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுகிட்டு தனித்தனியாகி ஒண்டிக் கூட்டணியாக ஆகிவிடுவாங்க போல. பப்புவோட முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். உண்டி குலுக்கி கிடைப்பது போதாமல் கூட்டணி கட்சியிடம் யாசகம் பெற்று பொழைப்பை நடத்தும் கட்சி எங்கே. தேசபக்தியும் தெய்வபக்தியும் இரு கண்களாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் எங்கே.


Suppan
ஜூலை 20, 2025 20:56

சம்முவம் ஐயா உங்களுக்கு இப்பந்தான் தெரிஞ்சிச்சா ராகுல் முதிர்ச்சியற்றவர்ன்னு .


Balaa
ஜூலை 20, 2025 20:26

சண்முகம் , நீதான் தைரியமான ஆள் ஆச்சே. தமிழ் நாட்டில காங்கிரஸ் இருக்கும் கூட்டணியிலிருந்து வெளியே வாயேன்.20 கோடி துட்டுக்கு அடிமைகள்?


Balaa
ஜூலை 20, 2025 20:23

சண்முகம் ,எதுப்பா மதவாதம். கிறிஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஜால்ரா போட்டா அது மதச்சார்பின்மை. இந்துக்களுக்கு ஆதரவாக பேசினா மதவெறியா. நாடே உங்களை ஒதுக்கி வெச்சாலும் திருத்த மாட்டீங்களா.


M Ramachandran
ஜூலை 20, 2025 20:14

திருட்டு கம்யூனிஸ்டுகள் தனக்குனு வரும் போது தான் வாய் பிளப்பார்கள். அப்போது தான் இது தக்காளி இல்லை ரத்தம் தான் என்று உணர்வு வரும்


M Ramachandran
ஜூலை 20, 2025 20:11

RSS campil ராகுல் ட்ரைனிங் எடுத்தால் நாட்டு பற்றும் மக்களிடம் எப்படி உணமையாக இருக்கமுடியும் என்பது அறிய முடியும் என்றும் பேரிடர்காலத்தில் மக்களை எப்படி காப்பாற்ற முடியும் என்பதும் தெரியும். தமிழ் நாட்டில் ஜெயலலிதா, ஸ்டாலின் ஆட்சி காலத்திலும் வெள்ளம் ஏற்பட்ட இடத்தில் யாரும் யாரையும் கேட்காமலும் உதவியவர்கள் அவர்களே. அதை சினிமா நடிகர் ராஜ்கிரனே அன்று ஊடகத்தின் மூலம் தெரிவித்தார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை