பிளம்பர் வீட்டில் ரெய்டு
சென்னை:மும்பையைச் சேர்ந்தவர் மோகன்; லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி, நான்கு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் குடி பெயர்ந்து, எண்ணுார் வ.உ.சி., நகரில் வசிக்கிறார். இவரது மகன் ராஜேஷ், 30; பிளம்பர். இவர், புதிதாக சொத்து வாங்கியதாகவும், அதற்காக 5 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அமலாக்கத் துறை போலீசார், ராஜேஷ் வீட்டில், நேற்று காலை 8:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையில், ராஜேஷ், மதுபோதைக்கு அடிமையானவர் என்பதும், திருவள்ளூரின், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. ஆய்வில் எந்த ஆவணங்கள் சிக்கவில்லை எனக்கூறி, மதியம் 2:00 மணிக்கு பின், அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.