ரயில்வே கோட்ட மேலாளர்கள் மாற்றம்
சென்னை:தெற் கு ரயில்வே கோட்ட மேலாளர்கள் மூவர் உட்பட நாடு முழுதும், 32 ரயில்வே கோட்ட மேலாளர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை ரயில்வே கோட்ட மேலாளராக இருந்த ஏராய புத்யா விஸ்வநாத் மாற்றப்பட்டு, சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனுக்கு பதிலாக, பாலக் ராம் நெகி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா இடமாற்றம் செய்யப்பட்டு, ஓம் பிரகாஷ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் தடம்பு ரண்டது, தீ விபத்து ஏற்பட்டது, ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதியது என, அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறியதால், ரயில்வே கோட்ட மேலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.