உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெலுங்கானாவில் ரயில்வே தேர்வு; தமிழக இளைஞர்கள் மனஉளைச்சல்

தெலுங்கானாவில் ரயில்வே தேர்வு; தமிழக இளைஞர்கள் மனஉளைச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ரயில்வே தேர்வில் 80 சதவீத தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது தேர்வர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.கடந்தாண்டு ஜனவரியில் உதவி லோக்கோ பைலட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தெற்கு ரயில்வேயில் தமிழகத்திற்கு சென்னை தேர்வு வாரியம் மூலமும், கேரளத்திற்கு திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலமும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சென்னை வாரியத்தில் 493 உட்பட நாடு முழுதும் 18,799 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. முதல்நிலைத்தேர்வு கடந்த நவ., 26 முதல் 29 வரை நடந்தது. பிப். 26ல் முடிவுகள் வெளியாகின. சென்னை வாரியத்தில் 6,315 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான 2ம் நிலைத் தேர்வு மார்ச் 19, 20ல் நடக்கவுள்ளது. ஹால் டிக்கெட் நேற்று வெளியானது. இந்நிலையில் தமிழக தேர்வர்களில் 80 சதவீதம் பேருக்கு தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வுக்கான தயாரிப்பில் சுணக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற மன அழுத்தமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூறியதாவது: சென்னை வாரியத்தில் 6315 பேர் தேர்வான நிலையில் தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்காதது கவலையளிக்கிறது. இது மாணவர்களை நியாயமற்ற முறையில் வடிகட்டுவதற்கான வழி. எங்கள் எதிர்காலம் இத்தேர்வில் அடங்கியுள்ளது. தொலைதுார மையங்களை ஒதுக்குவதன் மூலம் மன உளைச்சலுக்கு ரயில்வே வாரியம் ஆளாக்கி உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Bhaskaran
மார் 19, 2025 07:46

அடுத்த தெருவில் தேர்வு மையம் தேவை என்றுஅதே ஊரிலேயே பணி நம் இளைஞர்களை குறுகிய வட்டத்துக்குள் உழலச்செய்யும் அரசியல் வியாதிகள் நீடுழிவாழ்க .இதை மீறி சில இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்வெழுது வேலை கிடைக்கப் பெற்றால் அரசை குறை கூறும் திராவிட கும்பல்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 16, 2025 22:51

தேர்வு எழுதவே அடுத்த மாநிலத்துக்கு போக யோசிப்பவர்கள் தேர்வில் வென்று பணியை அடுத்த மாநிலத்தில் கொடுத்தால் எப்படி பணியில் சேருவார்கள்? அதனால் தேர்வை அவரவர்கள் இல்லத்திலும் பணியை அவர்கள் வசிக்கும் தெருவிலுமே ஒதுக்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்


VARUN
மார் 17, 2025 14:19

மாட்டிகிட்டு ....


venugopal s
மார் 16, 2025 21:40

இதுபோன்ற தமிழக மக்களுக்கு எதிரான கேவலமான செயல்களில் ஈடுபடும் மத்திய பாஜக அரசை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்பது முற்றிய மன நோயின் அறிகுறி!


venugopal s
மார் 16, 2025 16:13

அது தானே வேண்டும் அவர்களுக்கு!


Nellai tamilan
மார் 16, 2025 12:43

எங்களுக்கு வடக்கன் மட்டுமே பிரச்சனை மற்றபடி முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் ஓங்கோல் வழி வந்த தெலுங்கர்களே.


பாமரன்
மார் 16, 2025 12:23

லோகோ பைலட் என்பது வட்டாரத்தில் செய்யும் வேலை... மற்ற மத்திய அரசு பணி மாதிரி கிடையாது... இது புரியாமல் பிதற்றுதுக பகோடாஸ்


Shekar
மார் 16, 2025 12:54

ஆமா.. டில்லி செல்லும் வண்டியை சென்னையில் வண்டி எடுக்கும் லோகோ பைலட் குமிடிப்பூண்டி தமிழ்நாடு எல்லை வந்தவுடன் வண்டியை நிறுத்தி இறங்கி போய்விடுவார். உபிஸ் மாதிரி கும்மிடிப்பூண்டி தாண்ட மாட்டார்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 16, 2025 12:15

கன்னியாகுமரியில் இருப்பவர் சுமார் 700 கி மீ பயணித்து சென்னைக்கு தேர்வுக்கு வருவார். ஆனால் சென்னையில் இருந்து நெல்லூருக்கு சுமார் 200 கி மீ பயணிக்க மாட்டார். இதுதான் டாஸ்மாக் நாட்டு குடிமகன்களின் நிலைப்பாடு


Rajarajan
மார் 16, 2025 12:02

இது மிக மிக எளிதான, சரிசெய்ய கூடிய நிர்வாக கோளாறுதான். முதலில் தேர்வுமையங்களை, அந்த அந்த மாநிலங்களில் உள்ள பின்கோட் உடன் கொடுக்க வேண்டும். யார் எந்த பின்கோட் தங்களுக்கு வசதியான ஊரில் உள்ள தேர்வுமையங்களை தேர்ந்தெடுக்கிறார்களோ, தானாகவே அந்த தேர்வு மையத்தில் அவர்கள் பெயர் மற்றும் தகவல்கள் சென்று சேர்ந்து, அவர்களுக்கு இதெல்லாம் சேர்ந்த ஒப்புகை உடனே வரவேண்டும். இது மத்தியிலுள்ள சர்வரிலும் சரியாக பதியவேண்டும். அவ்வளவு தான். பதியவேண்டிய தேதிக்கு பிறகு, இவற்றை பிரிண்ட்அவுட் எடுத்து அந்த அந்த தேர்வு மையத்துக்கு அனுப்பினால் முடிந்தது பிரச்சினை. இதில் குழப்பத்திற்கு இடமேது ??


Padmasridharan
மார் 16, 2025 10:42

தெலங்கானா "சைதன்யா" தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழ்நாட்டினர், தெலங்கானா செல்வது சரி என்று நினைத்தார்களோ


Apposthalan samlin
மார் 16, 2025 10:38

தமிழ் நாட்டில் சென்டர போட்டால் வடக்கன் கள் முறைகேடு பண்ண முடியாது சமீபத்தில் வட மாநிலத்தவர்கள் அகப்பட்டார்கள் நினைவு இருக்கலாம் .அதனால் தான் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறது . மத்திய அரசு தேர்வுகள் ஓன்று கூட நேர்மையாக நடை பெறுவதில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை