உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

சென்னை: 'தென் மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில், தலா 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இது தவிர, கோவை, ஈரோடு, தென்காசி, திருச்சி, தேனி மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதி களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் இன்று, இடி, மின்னலுடன் மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மழை பெய்யும். மேலும், வரும் 15 முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை