மேலும் செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்
05-Jan-2025
சென்னை: 'தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, ஓரிரு இடங்களில் மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்குவில் தலா 7 செ.மீ., காக்காச்சி 5 செ.மீ., மாஞ்சோலையில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.குறிப்பாக, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை, மாநிலம் முழுதும் பரவலாக மழை பெய்யும். வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழையாக பெய்ய வாய்ப்புள்ளது.வரும் 14, 15ம் தேதிகளில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதேபோல், வரும் 16, 17ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
05-Jan-2025