உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை மழை

தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை மழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 26 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்ததாக, மேல்பவானியில் 19, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 17, நீலகிரி நடுவட்டத்தில் 16 செ.மீ., மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, குஜராத் - வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில், பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசும். அத்துடன், 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.https://x.com/dinamalarweb/status/1949635308645183687சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். வரும் 31ம் தேதி வரை, தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை