உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல சுழற்சியில் இருந்து, கர்நாடகா, தமிழகம் வழியாக மன்னார் வளைகுடா வரை வளி மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதனால், கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி. கடலுார், பெரம்பலுார், அரியலுார், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை