உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 501 இடங்களில் மழைநீர் அகற்றம்; 41 இடம் இன்னும் பாக்கி; சொல்கிறது சென்னை மாநகராட்சி!

501 இடங்களில் மழைநீர் அகற்றம்; 41 இடம் இன்னும் பாக்கி; சொல்கிறது சென்னை மாநகராட்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 542 இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் 501 இடங்களில் நீர் அகற்றப்பட்டது என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டனர். மழை ஓய்ந்த நிலையில் நிவாரண பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: சென்னையில் 542 இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் 501 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள 41 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6,963 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
அக் 17, 2024 05:50

டக் டூர் என்று ஒன்று உண்டு. மிகக்குறைவான விலையில் தரையிலும் கடலிலும் இயங்கும் வசதியுள்ள வாகனங்களை அதிகம் உபயோகிக்கிறார்கள். அதே போல ஏராளமாக வாகனங்களை வாங்கி உபயோகித்தால் ஆர் எஸ் எஸ் கூட தேவையில்லை. பொதுமக்கள் தண்ணீருக்குள்ளேயே வாழப்பழகி விடுவார்கள்.


J.V. Iyer
அக் 17, 2024 04:37

1967 முதல் மாற்றி மாற்றி தமிழகத்தை ஆண்டு ஒருவழி செய்துவிட்டார்கள். தன்தலையில் மிளகாய் அரைப்பது தெரியாமல் தமிழக மக்களும் மாற்றி மாற்றி இவர்களை பதவியில் வைத்து அழகு பார்க்கிறார்கள். என்ன கொடுமை சென்னை மக்கள் கொடுத்துவைத்தவர்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழகமே? சென்னை வாசிகளே?


சோலை பார்த்தி
அக் 16, 2024 23:09

இவங்களுக்கு தான ஒட்டு. . .சாரி ஓட்டு போட்டீங்க.... அப்படின்னா அனுபவி ராஜா அனுபவி


ஆரூர் ரங்
அக் 16, 2024 21:57

அடுத்து என்ன? கொசு வழங்கும் திட்டமா?


ஆரூர் ரங்
அக் 16, 2024 21:37

இன்னும் லட்சம் கோடிக்கு பேக்கேஜ் போட்டாலும் படகும் பம்ப்பும் JCB யுமே நிரந்தரத் துணை. இதுக்கு கால்வாய் கட்டாமலே இருந்திருக்கலாம்.


முக்கிய வீடியோ