உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் சேகரிப்பு: 100 இடங்களில் ரூ.160 கோடியில் நிறுவ முடிவு

ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் சேகரிப்பு: 100 இடங்களில் ரூ.160 கோடியில் நிறுவ முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 100 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில், சிறிது நேரம் மழை பெய்தாலே ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது. குறிப்பாக, சாக்கடையில் கலந்து கழிவு நீராக பயனற்றதாக மாறி வருகிறது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள் என அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவற்றை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்காததாலும், முறையாக பராமரிக்காததாலும் பெரும்பாலான கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பயனற்றுள்ளது. பருவநிலை மாற்றத்தால் மழை, வெயில் தாக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, குறுகிய காலத்தில் அதிக மழை கொட்டித்தீர்ப்பதையும் காண முடிகிறது. நீர்த்தேக்க வசதி இல்லாததால், இவை வீணாக குளம், ஆறு வழியாக கடலில் கலந்து வருகிறது. மழைநீரை வீணாக்காமல் நிலத்தடிக்குள் செலுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக, நீரியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீரை சேமிக்க, 100 இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இத்தொழில்நுட்பத்தின்படி, தண்ணீர் தேங்கும் இடங்களில், 3 மீ., ஆழத்துக்கு தோண்டி, முதலில் ஜல்லி, பின் 'இக்கோ பிளாக்' வைக்க வேண்டும். இவற்றை, 10 மீ., ஆழத்தில் குழாய் வாயிலாக மண்ணுடன் இணைக்கும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. 'ஸ்பான்ஞ்' போன்ற இந்த அமைப்பு வாயிலாக, மழைநீர் வடிகட்டப்பட்டு கீழே சென்று நீர் மட்டம் அதிகரிக்க வழிவகை செய்கிறது. ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டாரத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதால், தண்ணீர் தேங்குவது பெருமளவு தவிர்க்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,''மாநகராட்சி பகுதிகளில், 100 இடங்களில் ரூ.160 கோடியில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க உள்ளோம். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் நிதி கோரியுள்ளோம். நிதி ஒதுக்கியதும் பணிகள் துவக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

RAM MADINA
செப் 27, 2025 15:45

அண்ணாமலை சொத்து வாங்கிட்டாருனு கணக்கு கேட்டவன் எல்லாம் எங்கே... 200 ஊ பீ... இதுக்கு கணக்கு கொடுங்கடா...


c.mohanraj raj
செப் 25, 2025 15:22

அமராவதி ஆற்றில் வீணாகச் சென்ற நீரை அருகில் உள்ள குளங்களுக்கு மீறாமல் விட்டுவிட்டு மழையை சேமிக்கிறேன் வெங்காயத்தைச் சேமிக்கிறேன் என்று இதில் எத்தனை ஆயிரம் கோடி சுருட்ட போகிறாரோ யாருக்கு தெரியும் முதலில் மாநிலம் கடன் வாங்கும் உரிமையை பறிக்க வேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 25, 2025 13:57

மீண்டும் சாலைகளில் குழிகளை தோண்டி மக்களுக்கு இம்சை கொடுக்க இம்சை அரசன் முடிவெடுத்து விட்டார்


lana
செப் 25, 2025 12:57

நான் என் வீட்டில் 12000 litre அளவுக்கு மழை நீர் சேமிப்பு தொட்டி கட்டி உள்ளேன். தரைக்கு கீழ் உள்ளது. 12 வருடம் ஆகிறது எந்த பிரச்சினையும் வீட்டுக்கு இல்லை. எனக்கும் வருடத்தில் 8 முதல் 9 மாதம் நல்ல குடிநீர் கிடைக்கிறது. மொத்த செலவு 70 மட்டுமே. இ‌ன்று கணக்கில் கொண்டால் கூட 2 லட்சம் ஆகும். ஆனால் இங்கு 160 கோடி. நம்புற மாதிரி இருக்கா. இந்த பணத்தில் 50 குலம் குட்டை தூர் வாரி வரத்து கால்வாய் மராமத்து செய்தால் நல்லது


Natchimuthu Chithiraisamy
செப் 25, 2025 11:54

பொறியாளர்களே அரசு அலுவர்களே. ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் தொட்டி உள்ளது அதற்கு அருகில் அதே அளவு ஒரு தொட்டியை வெட்டவும் அதில் கீழ் தளம் மட்டும் பூசவேண்டாம். மாடி தண்ணீர் அதற்க்கு செல்லட்டும் உபரி வெளீயே வரட்டும். கொட்டி நிறையும் அளவு தான் மழை பொழியும் பிறகு தானாக வற்றிவிடும் நல்ல குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். BUILDING எதற்கு ஆகும் என்று பொறியாளர்கள் கேட்கலாம் தொட்டி முழுவதும் பூசி உள்ளதால் கட்டிடம் கண்டிப்பாக சேதம் அடையாது நீர் நேராக கீழேதான் செல்லும். போர்வெல் வாட்டர் நல்லதாக மாறும். அதை ஜெயலலிதா கொண்டுவந்தார்


lana
செப் 25, 2025 11:14

ஒன்றிய அரசு பணம் கொடுத்தால் நாங்கள் வாங்கி தின்று விட்டு sticker ஒட்டி கொள்வது. எல்லாமே அவர்கள் பணம் வேண்டும் என்றால் மாடலிங் அரசின் பணம் மொத்தம் ஸ்வாஹா தானே


அப்பாவி
செப் 25, 2025 11:12

அடப்பாவிங்களா... இருக்கிற கண்மாய், ஏரிகளை ஆக்கிரமிச்சு வூடு கட்டி இப்போ ஜெர்மன் தொழில்நுட்பம் போட்டு ஆட்டை. வெளிநாடு சுற்றுப் பயணம் வெற்றிகரமான ஆட்டைப் பயணம்.


Vasan
செப் 25, 2025 10:35

ஜெர்மன் டெக்னாலஜி தேவை இல்லை. பழைய தமிழக சேர சோழ பாண்டிய பல்லவ டெக்னாலஜி போதும். 1 ஏரி, குளம் ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் 2 ஏரி, குளத்தை தூறு வாருங்கள் 3 ஏரி, குளத்திற்கு மழை நீர் வெல்லும் பாதையை மீட்டெடுங்கள், சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு செய்தாலே மழை மற்றும் வெள்ள நீர் தானாய் ஏரி, குளங்களுக்கு சென்று அடையும்


Sivasankaran Kannan
செப் 27, 2025 13:18

கொள்ளை அடிக்க வேறு யாராவது பெயரில் திட்டம் செய்தல் திராவிட ஆட்சியின் சாதனை , தமிழ் மக்கள் முட்டா-ள் தனத்தின் வேதனை.


m.arunachalam
செப் 25, 2025 09:28

நம் நாட்டில் நாம் உற்பத்தி செய்யும் லட்சக்கணக்கான பொறியாளர்கள் எங்கே?.


உ.பி
செப் 25, 2025 09:09

தமிழை காக்குரவங்க ஏன் தமிழன் வெச்ச கோவில் குளத்தை தூர்வாராமல் அழிச்சு அன்னிய முறைக்கு ஓடுராங்க? இதுதான் 60 வருஷ மாடல்


புதிய வீடியோ