உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் கொடுமைக்கு எதிராக ராஜஸ்தான் இளைஞர்கள் நடைபயணம்

பாலியல் கொடுமைக்கு எதிராக ராஜஸ்தான் இளைஞர்கள் நடைபயணம்

வத்தலக்குண்டு: பாலியல் கொடுமையை கண்டித்து ராஜஸ்தான் இளைஞர்கள் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரசார நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மகாவீர் 28, ராஜேஸ்வீர்32. இவர்கள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.ராஜேஷ்வர் கூறுகையில், ஐ.டி., துறையில் பணியாற்றினேன். அதில் எனக்கு முழு ஈடுபாடு ஏற்படவில்லை. அவ்வப்போது நாட்டில் ஏற்படும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக நானும் எனது நண்பனும் உரையாடிக் கொண்டிருந்த போது இந்த யோசனை தோன்றியது. அதன்படி நவ.,14ல் கன்னியாகுமரியில் நடை பயணத்தை துவக்கினோம். தற்போது கொடைக்கானல் செல்கிறோம். காஷ்மீர் வரை எங்களது பயணம் தொடரும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை