உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மை காலமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி விட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2iq1dm0p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், இன்று சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ரஜினியின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு, அது புரளி என தெரிய வந்தது. இருப்பினும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மணிமுருகன்
அக் 11, 2025 23:07

ஊரில் உள்ள அத்தனை பிரபலமானவர்களுக்கும் மிரட்டல் வரட்டும் அதை யார் என்று கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று அயர்லாந்து வாரிசு திராவிடமாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி காவவ்துறை எனடற ஏவல்துறை திரைகதைவசனம் நாடகம் போடட்டும் எனது போனை எங்கள் வூட்டில் உள்ள அத்தனை சாதனங்களும் வளைதளத்தில் ஆராய்ந்து பாட்டு போட்டால் தடை இந்தப் படம் அந்த படம்என்று ஒப்பாரி வைக்கும் கூட்டத்தை காசு கொடுத்து கவனிக்கும் அயர்லாந்து வாரிசு திராவுட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி ஏவல்துறைக்கு இமெயில்கணஒ்டுப்பிடிக்க முடியவில்லை என்பது சந்தேகத்தை வரவழைக்கிறது இத்தனை இடங்களில் மிரட்டல் வந்தப் பிறகும்நடவடிக்கை எடுக்காமல இருப்பதற்கு என்ன காரணம் அனுப்புவதே அயர்லாந்து வாரிசு தொராவிடமாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி கூட்டம் தானா இதையும் சொல்லு கிறேன் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்தீர்கள் எச்சரிக்கை


சாமானியன்
அக் 11, 2025 22:43

அடியேனுக்கு ஒரு சந்தேகம். திமுக பெரியதலைகள் வீடுகளுக்கு ஏன் இதுவரை வெடிகுண்டு மிரட்டல் வரவில்லை. திமுக ஐ.டி விங் ஏதோ சில்மிஷம்.


T.sthivinayagam
அக் 11, 2025 21:56

எலெக்சன் வேலையை மேலிடம் ஆரம்பித்துவிட்டது.


Sun
அக் 11, 2025 21:23

பஸ்ல வச்சாள், ட்ரய்ன்ல வச்சாள், தேங்காய்ல வப்பாளோ ? வச்சுட்டாளே !


V Venkatachalam
அக் 11, 2025 21:11

மெயின் டார்கெட் விஜய்தான். திருட்டு தீயமுக செட்டப்தான். 1990 ல் கோடம்பாக்கம் சர்க்காரியா காலனியில் கே பத்மநாபன் கொலையை அரங்கேற்றினார்கள். இப்போ இந்த தொடர் வெடி குண்டு மிரட்டல் கிட்டதட்ட அது மாதிரி இருக்கிறது. விஜய் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சமயமிது. திருட்டு தீயமுக ஐடி விங்- கை பிடித்து விசாரித்தால் இந்த நெட் ஒர்க் நூலை பிடித்து விடலாம். டமில் நாட்டு போலீஸை நினைத்தால் வருத்தமாயிருக்கு.


Kudandhaiyaar
அக் 11, 2025 22:24

சாதாரணமான மனிதர்கள் இப்படி வருத்தப்படும்படி காவல் துறை மாற்று குறைந்து நிற்கிறது. என்ன ஒரு தலை நிமிர்ந்து பெயர் வாங்கிய துறை.


D Natarajan
அக் 11, 2025 20:58

எவ்வளவு வெடிகுண்டு மிரட்டல். எவ்வளவு நேரம் வீணாகிறது. hotmail, outlook மூலமாக மெயில் வருவதாக ஒரு செய்தி. மத்திய அரசு உடனடியாக outlook ஹாட்மெயில் இவற்றை தடை செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை