உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛அபூர்வ ராகங்கள் தந்த ‛அபூர்வ மனிதர் ரஜினி: 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதிசய நாயகன்

‛அபூர்வ ராகங்கள் தந்த ‛அபூர்வ மனிதர் ரஜினி: 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதிசய நாயகன்

இந்தியத் திரையுலகத்தில் தனது 75வது வயதிலும் சாதனை படைக்கும் ஒரு நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் மட்டும் அவர் படைத்த சாதனைகள் ஏராளம், ஏராளம். ‛சூப்பர் ஸ்டாரு யாரு...னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லு...' என்ற பாடலுக்கு ஏற்ப இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் நடிகர் ரஜினி நடித்த முதல்படமான அபூர்வ ராகங்கள் திரைக்கு வந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதன்மூலம் திரையுலகில் 50வது ஆண்டை ரஜினி கடந்துள்ளார். அவரின் திரை பயணத்தை பற்றிய தொகுப்பு இதோ...

தொழிலாளி ரஜினி

பெங்களூருரில் 1950, டிச., 12ல் பிறந்த ரஜினியின் இயற்பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட். பால்ய பருவத்திலேயே தனது தாயை இழந்ததால் தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் உள்ள ரஜினிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளி , அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தந்தது. ஆபிஸ் ப்யூனாக தனது முதல் பணியை ஆரம்பித்த ரஜினி, மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், தச்சுப் பட்டறைத் தொழிலாளியாகவும் பணிபுரிந்திருக்கின்றார். பின் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராகவும் பணி செய்துள்ளார்.

சிவாஜிராவ், ரஜினியாக மாறியது

ரஜினிக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை அறிந்து இவருக்கு அரிதாரம் பூசி நடிகராக்கியது இவருடைய நண்பர் ராஜ் பகதூர். அவரின் நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் தமிழக அரசு திரைப்படக் கல்லூரிக்கு சென்று அங்கே நடிப்பை கற்கத் தொடங்கினார். இயக்குனர் கே பாலசந்தரின் பார்வை பட 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்தார். ரஜினி நடித்த முதல் படம் இதுவாகும். திரைப்படத்திற்காக இவர் பேசிய முதல் வசனம் 'பைரவி வீடு இதுதானா?', 'நான் பைரவியின் புருஷன்' என்று தனது முதல் காட்சியிலேயே தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசி நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது ரஜினிக்கு. இத்திரைப்படத்திற்குப் பிறகுதான் சிவாஜிராவாக இருந்த இவர், ரஜினிகாந்த் என கே பாலசந்தரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

வில்லன்

தொடர்ந்து கே.பாலசந்தரின் அடுத்தடுத்த படங்களான 'மூன்றுமுடிச்சு', ‛அவர்கள்' போன்ற படங்களில் பிரதான வில்லன் வேடமேற்று நடித்து மிகப் பிரபலமானார். வில்லனாக நடித்து வந்த ரஜினியால் குணச்சித்திர வேடத்திலும் ஜொலிக்க முடியும் என்று அவருக்குள் இருந்த அந்த குணச்சித்திர நடிகரை அடையாளம் காட்டியவர் எஸ்.பி.முத்துராமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த 'புவனா ஒரு கேள்விக்குறி' திரைப்படத்தில் முழுக்க முழுக்க குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

ஹீரோ டூ சூப்பர் ஸ்டார்

ரஜினி முழு ஹீரோவாக அவதாரம் எடுத்த முதல் திரைப்படம் 'பைரவி'. தயாரிப்பாளர் கலைஞானத்தால் அவர் ஹீரோவாக்கப்பட்டார். படத்தின் இயக்குநர் எம் பாஸ்கர். இதுவரை எம்ஜிஆரை வைத்து படமெடுக்காத தயாரிப்பாளர் கே.பாலாஜி, முக்தா சீனிவாசன் போன்றோரும் அதேபோல் சிவாஜியை வைத்து படமெடுக்காத தேவர் பிலிம்ஸ், சத்யா மூவீஸ் போன்றோரும் ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.70களின் கடைசியிலும், 80களின் ஆரம்பத்திலும் பல வித்தியாசமான படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் அன்றைய ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான நடிகராக மாறினார். அந்த ஈர்ப்பு தான் அப்படியே மாறி மாறி அவரை சூப்பர் ஸ்டார் ஆக உருமாற்றியிருக்கிறது. வேறு யாரையும் அந்தப் படத்திற்கு நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை என்பது தான் உண்மை.ரஜினி திரைக்கதை எழுதி தயாரித்த திரைப்படம் 'வள்ளி'. குறிப்பாக 1990களில் வெளிவந்த 'தளபதி' 'மன்னன்' 'அண்ணாமலை' 'உழைப்பாளி' 'வீரா' 'பாட்ஷா' 'முத்து' 'அருணாச்சலம்' மற்றும் 'படையப்பா' என அனைத்து படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றவை. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 170க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

காளி முதல் கூலி வரை

காலம் மாற மக்களின் ரசனை மாறும் என்பார்கள். ஆனால், ரஜினிகாந்தைப் பொறுத்தவரை அது கூலி வரையிலும் மாறாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் பின்னரும் தொடரத்தான் போகிறது. எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னை அப்படியே பொருத்திக் கொள்ளும் சாத்தியம் ரஜினியிடம் இருக்கிறது. அவரை ராகவேந்திரர் ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது, எந்திரன் ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.சினிமாவிற்கு இருந்த இலக்கணத்தை உடைத்து இன்றும் பலர் தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டு திரையுலகத்திற்குள் நுழையவும், அப்படி நுழைந்தவர்களும் தங்களை சூப்பர் ஸ்டார்கள் ஆன நினைத்துக் கொள்வதற்கும் அப்போதே பாதை போட்டுத் தந்தவர் ரஜினி. இந்த 50 ஆண்டுகள் திரைப்பட வாழ்க்கையில் கே.பாலசந்தர் தொடங்கி இன்றைய இளம் இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் வரை பல முன்னணி இயக்குநர்களிடமும் நாயகனாக பணியாற்றியும், பணிபுரிந்து கொண்டும் இருக்கும் ஒரே அதிசய நாயகன் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.170க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி நடித்துள்ளார். இதில் உங்களுக்கு பிடித்த படம் எது, என்ன காரணம் என கீழே கமென்ட்டில் சொல்லுங்க...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Elangovan
ஆக 17, 2025 00:54

கூலி படம் பார்த்தேன் இந்தமாதிரி ஒரு மட்டமான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை தயவசெய்து லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷன் துறையை விட்டு வேறு தொழில் செய்யட்டும் கதையும் இல்லை ஒரு மண்ணும் இல்லை ஏதோ கருப்பு பணத்தை வெள்ளையாக்க எடுத்துருக்க எண்ண தோணுது


Ganeshan R
ஆக 16, 2025 12:10

தளபதி .....


தமிழன்
ஆக 16, 2025 09:54

பிறந்தது முதல் முதுமை வரை எத்தனையோ மக்கள் பல கூலி வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் தன் குடும்பத்திற்காக மூன்று வேளை சாப்பாடு கழிவேதே பேரும் பாடாக இருக்கிறது. ரஜினி அவர் குடும்பத்திற்காக உழைக்கிறார் இதில் என்ன சாதனை. அதுவும் உழைப்புக்கு மீமீமீறீய வருமானம் தயவு செய்து நாட்டுக்காக உழைப்பவர்களை மதிங்க ஐயா அவங்களுக்கு ஊக்கம் கொடுங்க


Ragupathy
ஆக 16, 2025 09:41

75 வயதில் நாயகன் நடிப்பது பெரிய விஷயம்... இந்தியாவிலேயே யாரும் இல்லை... ஆனால் வாழவைத்த தமிழகத்திற்கு பெயர் சொல்லும்படி எதுவும் செய்யவில்லயே... நடிகர் பாலா இந்த வயதிலேயே காலம் முழுதும் அவர் பேர் சொல்லும்படி செய்த உதவிகள் ஏராளம்.


Srinivasan
ஆக 16, 2025 08:51

ரஜினியின் "ஆறுலிருந்து அறுபது வரை " படம் பாடல் "கண்மணியே காதல் என்பது....." நான் எங்கு இருந்தாலும் என்னை எங்கோ கவர்ந்து சென்று விடும். வாலிப பருவ பட பாடல் மனதில் பொதிந்த பசுமை நினைவு ரஜினி வாழ்க


சின்னப்பா
ஆக 15, 2025 18:26

கூலி படத்திற்கு விளம்பரம்.


D Natarajan
ஆக 15, 2025 15:18

ஒரு நல்ல நடிகர். அதிகமான தமிழ் படங்களில் நடித்து நிறைய சம்பாதித்தவர். தன்னை மதித்த சிறப்பித்த கடவுள் போல ஆராதித்த தமிழ் நாட்டிற்கு ஏதாவது செய்தாரா. இல்லை என்று சொல்ல வேண்டும்


பேசும் தமிழன்
ஆக 15, 2025 15:14

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் ...சின்ன குழந்தையும் சொல்லும் ....அது நூற்றுக்கு நூறு உண்மை .....இன்றைக்கு கண்டவனெல்லாம் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தனக்குதானே சொல்லி கொண்டு திரிகிறார்கள் .....ஆனால் சூப்பர் ஸ்டார்ட் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்....ஒரே மக்கள் திலகம் ....ஒரே நடிகர் திலகம் .....ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்ட்.....அவர் தான் .....வேண்டாம் பெயரை சொன்னால் தான் தெரிய வேண்டும் என்பதில்லை ....அது தான் சூப்பர் ஸ்டார்ட்


venugopal s
ஆக 15, 2025 15:10

தகுதியே இல்லாமல் உயர்ந்த நிலைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர்! ஆனால் இவரை விட மோசமான உதாரணமாக மற்றொருவர் இருக்கிறார்!


Prasath
ஆக 15, 2025 18:38

எப்படி உங்க தலைவர் டோப்பா தலை , பால்டாயில் போலவா


Ramamoorthy M
ஆக 15, 2025 15:05

நிஜ வாழ்க்கையில் திமுகவின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அதில் ஐக்கியமான தொடை நடுங்கி!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை