ரம்ஜான் சிந்தனைகள்-20
உனக்கா இடமில்லை
ஈஸா நபி நடந்து சென்ற போது திடீரென மழை பெய்தது. மின்னல் வெட்டியது. ஒதுங்குவதற்கு அவர் இடம் தேடினார். ஓரிடத்தில் குடிசை தெரிந்தது. அங்கே போகலாம் என பார்த்த போது, அங்கு ஒரு பெண் இருந்தாள். எனவேஅங்கிருந்து நகர்ந்து சென்றார். பின் குகை ஒன்று தெரிந்தது. அங்கே ஒதுங்கலாம் என பார்த்தபோது, உள்ளே ஒரு சிங்கம் இருப்பதைக் கண்டு விலகினார். பிறகு வானத்தை நோக்கி, 'இறைவா! உன் படைப்புகள் எல்லாம் ஒவ்வொரு இடத்தில் ஒதுங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு நீதான் இடங்களை கொடுத்திருக்கிறாய். ஆனால் எனக்குத் தான் ஒதுங்க இடம் இல்லை' என முறையிட்டார். உடனே அவன் செய்தி அனுப்பினான்.'ஈஸா! ஒதுங்க உனக்கா இடமில்லை. என் அன்பு எப்போதும் உண்டு. என் அன்பு நிழலில்தான் நீர் எப்போதும் ஒதுங்கி நிற்க வேண்டும். இம்மையின் ஆயுளை விட மறுமையின் ஆயுள் பெரியது. இம்மையில் ஒரு மனிதனின் முழுஆயுளை மறுமையில் ஒரு தினத்துக்கு ஒப்பிடலாம்' என்பதே அது. பார்த்தீர்களா... உலகத்தில் ஏற்படும் தடை, பிரச்னையை பொறுத்துக் கொண்டால் மறுமையில் இறையருளைப் பெறலாம்.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி