மேலும் செய்திகள்
'ஜொள்ளுங்க... மேடம்!'
18-Mar-2025
நான்கு மாதங்கள்பாஹிலா குலத்தைச் சேர்ந்த நபர் நீண்ட நாள் கழித்து நபிகள் நாயகத்தை சந்தித்தார். ''என்ன நேர்ந்தது உமக்கு. கடந்த ஆண்டு வந்தபோது நல்ல தோற்றத்துடன் இருந்தீர்களே'' எனக் கேட்டார். ''நான் இப்போது நோன்பு நோற்று வருகிறேன். இரவில் மட்டும் சாப்பிடுகிறேன்'' என்றார். ''உங்களை நீங்களே வேதனையில் ஆழ்த்திக் கொண்டீர்கள். தொடர்ச்சியாக நோன்பு நோற்று உடலைக் கரைத்துவிட்டீரே'' என்று சொல்லி பின்வரும் கட்டளைகளை வழங்கினார். ''ரம்ஜான் நோன்புகளைத் தவிர ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பு நோற்றுக் கொள்ளும்'' என்றதற்கு, ''நோன்பு நோற்பதற்கு எனக்கு வலிமை இருக்கிறது'' என்றார் அவர். ''சரி. ஒவ்வொரு ஆண்டும் அஷ்ஹுருல் ஹுர்மு என்னும் கண்ணியம் மிக்க நான்கு மாதங்களில் (ரஜப், துல்ஹாதா, துல்ஹஜ், மொகரம்) நோன்பு வையுங்கள். பின்னர் விட்டு விடும். இவ்வாறே ஆண்டு தோறும் செய்யுங்கள்'' என்று சொல்லி அனுப்பினார். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி
18-Mar-2025