உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராமங்களை நோக்கி பயணம் மகனுக்கு போட்டியாக ராமதாஸ்

கிராமங்களை நோக்கி பயணம் மகனுக்கு போட்டியாக ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'கிராமங்களை நோக்கி' என்ற பிரசார பயணத்தை, செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு கிராமத்தில் நேற்று துவக்கினார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. நிர்வாகிகளை நீக்குவது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது என, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் 17ம் தேதி, ராமதாஸ் தலைமையில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு பதில் அளிக்க செப்., 10ம் தேதி வரை, அவருக்கு விதிக்கப்பட்ட கெடு முடிந்துள்ளது. கட்சிக்குள் அடுத்து என்ன நடக்கும் என தெரியாத நிலையில், அன்புமணி மேற்கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போட்டியாக, 'கிராமங்களை நோக்கி' என்ற பெயரில், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய, ராமதாஸ் முடிவு செய்துள்ளார். நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு கிராமத்தில், தன் பிரசார பயணத்தை துவக்கினார். அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடையே பேசிய ராமதாஸ், ''டாஸ்மாக் மதுக்கடை வருமானத்தை கொண்டு தான், அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ''ஒரு பக்கம் டாஸ்மாக் மதுவால், இளைய சமுதாயம் அழிந்து கொண்டிருப்பது போல, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களாலும் சீரழிகிறது. பெண்கள் மனது வைத்தால் மட்டுமே, போதையில்லா தமிழகத்தை உருவாக்க முடியும்,'' என்றார். பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ