உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வில் தலித்துகளை சேர்க்க ராமதாஸ் அறிவுரை

பா.ம.க.,வில் தலித்துகளை சேர்க்க ராமதாஸ் அறிவுரை

சென்னை : 'பட்டியலின, பழங்குடியினரை அதிக அளவில் பா.ம.க.,வில் சேர்க்க வேண்டும்' என, நிர்வாகிகளுக்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.'தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியாது' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்குப் பதிலளித்த ராமதாஸ், 'தமிழகத்தின் தனிப்பெரும் வன்னியர் சமுதாயமும், தனிப்பெரும் சமுதாய தொகுப்பான பட்டியலினமும் இணைந்தால், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வர முடியும்' என, தெரிவித்திருந்தார்.இது விவாதப் பொருளாகியுள்ள நிலையில், பா.ம.க.,வில் அதிக அளவு பட்டியலின, பழங்குடியினரை சேர்க்க வேண்டும் என்றும், கிராமங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, அரசியலில் ஆர்வம் உடைய பட்டியலின, பழங்குடியினரை இணைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் அறிவுறுத்தியதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க., மாவட்ட கலை இலக்கிய அணி இணைச்செயலரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான அன்பழகன் தலைமையில், பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், தைலாபுரம் தோட்டத்தில், ராமதாஸ் முன்னிலையில் நேற்று பா.ம.க.,வில் இணைந்தனர்.'அடுத்தடுத்தும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தோர் அதிக அளவில் பா.ம.க.,வில் இணைவர்; அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன' என, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

God yes Godyes
ஆக 21, 2024 19:33

ஒழுங்கான தோற்றத்தில் இருந்தால் அவன் புதுக்குடி.கசா முசா பேச்சுடன் ஓரங்கட்டி வசித்தாக்கா அவனுக்கு பட்டியல் போட்டு பழங்குடி என்பதா? இதெல்லாம் எவன் கத்து குடுத்தான். ஜாதிக்கு மறு பெயர் பழங்குடியா. இருப்பது இருபத்தோராம் நூற்றாண்டு.


God yes Godyes
ஆக 21, 2024 19:26

யோவ் நீ கொஞ்சம் ஏமாந்தாக்கா உன்னையும் தலித் ஆக மாற்றிவிட்டுவானுக.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 11:02

தலித் ஏழுமலை க்குப் பிறகு எந்த SC க்கும் உயர்பதவி அளிக்காதது உங்கள் குற்றம்.


Barakat Ali
ஆக 21, 2024 08:23

இதற்கு மாறாக திமுகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க முயற்சி செய்யலாமே ????


Barakat Ali
ஆக 21, 2024 08:22

அப்போ பெரிய டவுசரு நாடகக் காதல் ன்னு உருட்டுனதெல்லாம் ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 21, 2024 06:17

மாங்காய் man அவர்களை திரௌபதி கோயில் உல் முதலில் அனுமதியுங்க


Kasimani Baskaran
ஆக 21, 2024 05:21

தனிமைப்படுத்தி பிளாஸ்டிக் சேர் போடாமல் இருந்தால் வரவேற்கலாம். கூடுதலாக பயிற்சிகள் கொடுத்து கட்சியின் பிரதான பதவிகளை கொடுத்தால் நிச்சயம் உண்மையான பாட்டாளிகளின் கட்சி என்று சொல்லலாம். தமிழகத்தை பொறுத்த மாட்டின் அனைத்துக்கட்சிகளும் தனி மனிதனின் ஆளுமையை சார்ந்தே இருக்கின்றன. பாஜக சிறிது வித்தியாசமானது.


Mani . V
ஆக 21, 2024 04:52

சேர்த்து? அவர்களையும் குடிசை எரிக்க, பேருந்து, ரயிலில் கல் எறிய, தீ வைக்கப் பழக்கப்படுத்தி விட்டு, உங்கள் வாரிசுகளை மட்டும் படிக்க வைத்து, தேர்தலுக்கு தேர்தல் ஒவ்வொரு கட்சியாக தாவி பெட்டி வாங்கவா? ஆனாலும், சின்ன மாங்காய் முதல்வர் ஆக முடியாதப்பே.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி