உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தொண்டர்களை சந்திக்கிறார் பா.ம.க., ராமதாஸ்

 தொண்டர்களை சந்திக்கிறார் பா.ம.க., ராமதாஸ்

திண்டிவனம்: அரசியலில் இருந்து துறவறம் பூணுவதாக அறிவித்திருந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வரும் செப்., 1 முதல் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்தில் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ராமதாசுக்கும் அவரது மகனும் பா.ம.க., தலைவருமான அன்புமணிக்கும் இடையே நீடித்த மோதல், கடந்த ஜூன் 24ல், ராமதாஸ் திருமண நாளன்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 'அரசியலில் இருந்து துறவறம் பூணுகிறேன். இனிமேல் அரசியலில் தலையிட மாட்டேன்; அன்புமணி பார்த்துக் கொள்வார்' என ராமதாஸ் அறிவித்தார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்திக்க இருப்பதாக ராமதாஸ் அறிவித்து உள்ளார். 'செப்., 1 முதல் தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 12 :00 வரையிலும் , மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 வரையிலும் பார்வையாளர்கள் சந்திக்கலாம் என்றும், அரசியல் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 27, 2026 16:14

அரசியல் பேசக்கூடாது என்றால் பிறகு ஜெயிலர் 2 பத்தி பேசவா இந்த சந்திப்பு....!!!


guru நாதன்
ஆக 27, 2026 10:58

இது எல்லாம் அப்பாவும் மகனும் சேர்ந்து போட்டத் திட்டம்... ஆனால் கடைசியில் எதுவும் பலிக்கவில்லை..


Dv Nanru
ஆக 27, 2026 08:22

தொண்டர்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? தொண்டர்களுக்குச் செய்ய வேண்டிய நேரத்தில் எதுவும் செய்யவில்லை. இப்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? தொண்டர்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போ நீங்க என்ன செய்ய முடியும் உங்களால? கட்சியு உங்க கையில இல்ல. மகனும் உங்க பேச்சை கேக்குறது இல்ல. எந்த பயனுமே இல்ல இந்தச் சந்திப்பு வெறும் கண்துடைப்பு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 27, 2026 09:59

புரியாம பேசப்படாது. இவரை சந்திக்க வரும் அன்பர்கள் காணிக்கை செலுத்தி நுழைவு சீட்டு பெற்றுக்கொண்டபின் இவரை சந்தித்து வணங்கி ஆசி பெற்று செல்வார்களாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை